சீரியல் தயாரிச்ச வகையில கொஞ்சம் கடன்பட்டார் தினேஷ். கடன் கொடுத்தவர்கள் தினேஷ் மீது வழக்கு தொடர்ந்தபோது வழக்குல ரச்சிதா பெயரையும் சேர்த்துட்டாங்க. இதுல கடுப்பான ரச்சிதா ‘நான் இதுக்குதான் அப்பவே சொன்னேன், நீங்க கேட்கல’ எனச் சொல்ல லேசாக உண்டாகியிருந்த விரிசல் விசாலமாகத் தொடங்கியது. வழக்குல இருந்து ரச்சிதா பெயரை தினேஷ் விடுவிச்சுட்டாலும் கூட, தொடர்ந்து பணம் இருவருக்குமிடையில் ஒரு பிரச்னையாகவே இருந்தது.
ரச்சிதாவைப் பொறுத்தவரை, அவருக்கு வாய்ப்பு இல்லாவிட்டால் கூடப் பரவாயில்லை, தான் சம்பாதிக்கிற பணத்தை வீண்செலவு செய்கிறாரேனுதான் வருத்தம். இந்த விஷயத்தை தினேஷ் சரி பண்ண முயற்சி செய்ய மாட்டேங்குறார்னுதான் ஒரு கட்டத்துல பிரிஞ்சு போறதுங்கிற முடிவை எடுத்தாங்க” என்கின்றனர்.
’சரி, இவர்கள் சேர வாய்ப்பே இல்லையா? விவாகரத்து கேட்டு இவங்கள்ல யாரும் நீதிமன்றத்தை அணுகிட்டாங்களா’ என அவர்களையே கேட்டோம்.
+ There are no comments
Add yours