ஆரம்பத்தில் நிகழ்ச்சி கொஞ்சம் மந்தமாக நகர்வது தெரிந்தோ என்னவோ, வைல்டு கார்டு எண்ட்ரி என ஒரே நேரத்தில் ஐந்து போட்டியாளர்களை நிகழ்ச்சிக்குள் அனுப்பி வைத்தார்கள். தினேஷ், அர்ச்சனா, பிராவோ, கானா பாலா, அன்னபாரதி என உள்ளே சென்ற அந்த ஐந்து பேரில் தற்போது அர்ச்சனா, தினேஷ் இருவர் மட்டுமே பிக் பாஸ் வீட்டிலிருக்கிறார்கள்.
மேலும் பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் முதல் முறையாக எலிமினேட் ஆகி வெளியில் சென்றவர்களுக்கு மீண்டுமொரு முறை வாய்ப்பு தரும் விதமாக சில தினங்களுக்கு முன் இரண்டாவது வைல்டு கார்டு என்ட்ரியில் விஜய் வர்மா மற்றும் அனன்யாவை உள்ளே அனுப்பினார்கள்.
கடந்த வாரம் அந்த வீட்டில் நடந்தவை குறித்துப் போட்டியாளர்களுடன் கமல் விவாதித்த ஷூட்டிங் முற்பகலில் முடிவடைய அதன் பிறகு எவிக்ஷனுக்கான ஷூட்டிங் தொடங்கியது. தற்போது நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்படி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார் ஜோவிகா.
பிக் பாஸ் உள்ளே ஜோவிகா சென்ற போதே “வனிதா விஜய்குமாரின் மகள் என்பதால் நிச்சயம் கன்டென்ட் தருவார்’ என பலரும் நம்பினார்கள். சென்ற சில நாள்கள் அமைதியாக இருந்த ஜோவிகா படிப்பு குறித்துப் பேசியது பெரிய சர்ச்சையாகி விவாதப் பொருளானது. பிறகு கொஞ்ச நாள் சண்டைக் கோழியாக வலம் வந்தார்.
+ There are no comments
Add yours