எமதர்மனாக வரும் கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள். இவர்கள் நிகழ்த்தும் டிராமா மட்டுமே கொஞ்சம் ஆறுதல்! இங்கிலீஷ் திருடன் கூல் சுரேஷ், சுவாமிநாதன், மயில்சாமி, சேஷு, ஆர்.சுந்தர்ராஜன் எனப் பலர் இருந்தாலும் ‘அதுல ஒண்ணும் இல்ல, கீழ போட்ரு’ என ஆர்.சுந்தர்ராஜன் வசனத்தையே இவர்களுக்கும் விமர்சனமாகச் சொல்லிவிடலாம்.
அந்தக் காலத் திரையரங்கம், ரஜினி – கமல் கட்அவுட்கள், மாட்டு வண்டி பயணம் என 80ஸ் கிராமத்தை கண்முன் நிறுத்த கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார் கலை இயக்குநர் ஏ.ஆர்.மோகன். பாடல்களிலும் பின்னணி இசையிலும் பாஸ் மார்க் வாங்குகிறார் ஜிப்ரான். இவர்கள் இருவரால்தான் படம் ஓரளவுக்கேனும் தாக்குப் பிடிக்கிறது. ஜேக்கப் ரத்தினராஜின் ஒளிப்பதிவு மான்டேஜ் ஃபில்லர் ஷாட்கள், பாடல்களில் செயற்கையான காட்சியமைப்புகள் என்று சற்றெ தட்டுத் தடுமாறுகிறது. 128 நிமிடங்களுக்குள் படத்தை சுருக்கியதற்காக வேண்டுமானால் எடிட்டர் எம்.எஸ்.பாரதியைப் பாராட்டலாம்.
+ There are no comments
Add yours