`பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் கணேஷ் வெங்கட்ராம்.
இவர் `பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு படங்கள், வெப் சீரிஸ் என கவனம் செலுத்தி வந்தாலும் சின்னத்திரையில் சில தொடர்களில் ஸ்பெஷல் கெஸ்ட் ஆக என்ட்ரி கொடுத்தார். ஏற்கெனவே சின்னத்திரையில் இவரின் மனைவி நிஷாவுக்கென தனியொரு ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் நிலையில் இவரும் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

தற்போது ஜீ தமிழில் வரவிருக்கும் புதிய தொடரில் கணேஷ் வெங்கட்ராம் கதாநாயகனாக நடிக்க இருக்கிறாராம். அதன் மூலம் சின்னத்திரையில் அவருக்கு பெரிய ப்ரேக் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் கணேஷ் வெங்கட்ராம் – நிஷா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க, சின்னத்திரையில் வில்லியாக பரிச்சயமானவர் ஶ்ரீதேவி அசோக். பாசிட்டிவ், நெகட்டிவ் என எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் கலந்து கட்டி தன் பர்ஃபார்மன்ஸ் மூலம் அனைவரையும் கவனிக்க வைத்துவிடுவார். `ராஜா ராணி’ தொடரில் இவர் நடிப்பு பலருக்கும் பிடித்திருந்தது. ஶ்ரீதேவி – அசோக் தம்பதிக்கு சித்தாரா என்கிற பெண் குழந்தை இருக்கிறது.

தொடர்ந்து குழந்தை பிறந்த பின்பும் கைக்குழந்தையுடன் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தார் ஶ்ரீதேவி. இன்ஸ்டாகிராமில் அவர் பயங்கர ஆக்டிவ் பர்சன். `பொன்னி’, ‘மோதலும் காதலும்’ என சில தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், ஶ்ரீதேவி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டாவது குழந்தை கர்ப்பமாக இருக்கிற விஷயத்தை தனது ரசிகர்களுக்கு அறிவித்திருக்கிறார். வாழ்த்துகள் ஶ்ரீ தேவி – அசோக்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் `மகாநதி’. இந்தத் தொடர் ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடரில் `கங்கா’ கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த பிரதிபா அந்தத் தொடரில் இருந்து விலகியிருக்கிறார். திரைப்படங்களில் நடிப்பதனால் தேதி பிரச்னை காரணமாக அவர் நடிக்கவில்லை என சிலர் கமென்ட் செய்துவந்தனர் இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக அதுகுறித்து எவ்வித அறிவிப்பையும் பிரதிபா அறிவிக்கவில்லை.

இந்நிலையில் அவருக்கு பதிலாக கங்கா கதாபாத்திரத்தில் திவ்யா கணேசன் நடிக்கிறார். ஏற்கெனவே `பாக்கியலட்சுமி’ தொடரில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தக் கேரக்டருக்கு பக்காவாகப் பொருந்தியிருக்கிறார் என திவ்யாவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
+ There are no comments
Add yours