* விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் “கிழக்கு வாசல்’. ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் ஒன்லைன்தான் இந்தத் தொடர். எஸ்.ஏ.சந்திரசேகர், ரேஷ்மா, வெங்கட், அருண், அஷ்வினி என மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே அந்தத் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தொடரில் கதாநாயகியான ரேஷ்மாவைத் திருமணம் செய்யப் போகிற மாப்பிள்ளையாக நடித்திருந்தார் நடிகர் தினேஷ்.
தற்போது அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்திருப்பதால் அவருடைய கேரக்டர் மாற்றப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ தொடரில் நடித்திருந்த சசிந்தர் நடிக்கிறார்.
+ There are no comments
Add yours