தமிழ் திரையுலகில், அனைவருக்கு பிடித்த ஹீரோக்களுள் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் குறித்து பேசியுள்ள பிரபல நடிகர் ஒருவர், சூர்யா மிகவும் சுயநலமானவர் என்று பேசியுள்ளார்.
சூர்யா..
நடிகர் சூர்யா, சுமார் 26 வருடங்களுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் ஹீரோவாக வலம் வருகிறார். இவரது தந்தை சிவகுமாரும் கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக ஒரு ரவுண்டு வந்தவர். இவர்களின் குடும்பத்தை ரசிகர்களுக்கு மட்டுமன்றி, திரையுலகினர் பலருக்குமே பிடிக்கும். சினிமாவில் நல்ல நடிகர் என்று பெயரெடுத்ததை தாண்டி, இவர்கள் சமூக நலப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் சூர்யா, அகரம் எனும் அரக்கட்டளையை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து நடத்தி வருகிறார்.
சூர்யா குறித்து பேட்டி கொடுத்த நடிகர்..
நடிகர் சூர்யா குறித்து, சின்னத்திரை மற்றும் சினிமா துணை நடிகர் பிரித்விராஜ் பப்ளூ ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அவர், 4 வருடங்களுக்கு முன்பு கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் ஒரு நடிகரின் பெயரை சொல்லி அவர் குறித்த ஒரு நல்ல விஷயத்தையும் கெட்ட விஷயத்தையும் கேட்டனர். அஜித் குறித்து கேட்டபோது, அவர் ஒரு நல்ல மனிதர் என்று கூறினார். அவரிடம் உள்ள கெட்ட விஷயம் குறித்து பேசுகையில், அஜித்திற்கு டெடிக்கேஷனே இல்லை என்று பேசினார். இதையடுத்து, சூர்யா குறித்தும் கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், சூர்யா ஒரு Self Centered Person என கூறினார். இதற்கு “சுயநலமிக்கவர்” என்று அர்த்தம். மேலும், அவரை நல்ல நடிகர் என்றும் கூறினார்.
மேலும் படிக்க | ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஓடிடியில் வெளியீடு..! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?
அஜித்-சூர்யாவுடன் பப்ளூ நடித்த படங்கள்..
நடிகர் பப்ளூ, 90ஸ் படங்கள் சிலவற்றில் வில்லனாக நடித்திருக்கிறார். அப்படி அவர் வில்லனாக நடித்த படங்களுள் ஒன்று, அவள் வருவாளா. இப்படம், கடந்த 1998ஆம் ஆண்டு வெளியானது. இதில், அஜித் ஹீரோவாக நடித்திருப்பார். இது, இவர்கள் ஒன்றாக சேர்ந்து நடித்த முதல் படமாகும். இதையடுத்து, கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான படம் வாரணம் ஆயிரம். இந்த படத்தில் சிறிய வில்லன் கதாப்பாத்திரத்தில் சூர்யாவுடன் சேர்ந்து பப்ளூ நடித்திருப்பார். இந்த இரண்டு படங்களில் அவருக்கு அஜித்-சூர்யாவுடன் ஏற்பட்ட அனுபவங்களை வைத்து அவர் இப்படி பேசியிருக்கலாம் என கூறப்படுகிறது. பப்ளூ, தற்போது வெளியாகியுள்ள அனிமல் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
சர்ச்சையை கிளப்பிய பப்ளூ..
நடிகர் பப்ளூ, 1994ஆம் ஆண்டு பீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருந்தார். இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதையடுத்து, பப்ளூவும் பீனாவும் பிரிந்தனர். 57 வயதாகும் பப்ளூ, 23 வயது பெண் ஒருவரை காதலித்து வந்தார். இவர்கள் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் பரவியது. இவர்களுக்குள் இருக்கும் இந்த வயது வித்தியாசம் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியது.
மேலும் படிக்க | 2023ஆம் ஆண்டு கோலிவுட்டிற்குள் எண்ட்ரி கொடுத்த புது நடிகைகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours