கணவரைப் பிரியும் நடிகை ஷீலா
02 டிச, 2023 – 11:02 IST

தமிழில் “டூ லெட், திரௌபதி, மண்டேலா, பிச்சைக்காரன் 2, நூடுல்ஸ்” உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், ‘கும்பலாங்கி நைட்ஸ்’ மலையாளப் படத்திலும் நடித்தவர் நடிகை ஷீலா ராஜ்குமார். அவர் திரைப்பட உதவி இயக்குனரான சோழன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டவர்.
இந்நிலையில் சற்று முன் சமூக வலைத்தளத்தில் ஷீலா அவரது கணவரை டேக் செய்து, “திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன், நன்றியும், அன்பும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் சிறந்த படங்களைத் தேர்வு செய்து அதில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து பெயர் வாங்கியவர் ஷீலா. குறிப்பாக யோகி பாபு ஜோடியாக அவர் நடித்த ‘மண்டேலா’ படத்திற்காக பெரிதும் பாராட்டப்பட்டவர்.
சமீபத்தில் வெளிவந்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் எஸ்ஜே சூர்யாவின் காதலியாக சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
திருமண உறவு என்பது நடிகைகளைப் பொறுத்தவரையில் தற்காலிக உறவாகவே இருக்கிறது என்பதற்கு மற்றுமொரு உதாரணம் ஷீலா.
+ There are no comments
Add yours