இந்தத் திரைப்பட விழாவில் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மொழிகளைச் சேர்ந்த சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும். அவ்வகையில் இந்த ஆண்டு டிசம்பர் 14 முதல் 21 வரை நடைபெறும் 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 57 நாடுகளைச் சேர்ந்த 126 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. மேலும், விழாவின் தொடக்க நிகழ்ச்சியின்போது, இந்த ஆண்டுக்கான கான் விருது (Cannes) வென்ற ’அனாடமி ஆஃப் எ ஃபால்’ என்ற திரைப்படம் மற்றும் 8 ஈரானியப் படங்கள், 5 கொரியப் படங்கள் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருதுக்காகப் போட்டியிடத் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்ப் படங்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அக்டோபர் 16, 2022 முதல் அக்டோபர் 15, 2023க்குள் சென்சார் செய்யப்பட்ட படங்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளத் தகுதியானவை. அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் பட்டியல் இதோ…
1) அநீதி – வசந்தபாலன்
2) அயோத்தி – மந்திர மூர்த்தி
3) கருமேகங்கள் கலைகின்றன – தங்கர்பச்சான்
4) மாமன்னன் – மாரி செல்வராஜ்
5) போர் தொழில் – விக்னேஷ் ராஜா
6) ராவண கோட்டம் – விக்ரம் சுகுமாறன்
7) சாயாவனம் – அனில்
8) செம்பி – பிரபு சாலமன்
9) ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் – சந்தோஷ் நம்பிராஜன்
10) உடன்பால் – கார்த்திக் சீனிவாசன்
11) விடுதலை பாகம் 1 – வெற்றிமாறன்
12) விந்தியா விக்டிம் வெர்டிக்ட் வி3 – அமுதவாணன்
+ There are no comments
Add yours