Bigg Boss 7: `ஜெமினி கணேசன் வைத்த பெயர்; இரண்டு முறை நழுவிய வாய்ப்பு!' – விஷ்ணு நல்வரா? கெட்டவரா?

Estimated read time 1 min read

பிக் பாஸ் சீசன் 7 நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சமூகவலைதளப் பக்கங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த தாக்கம் அதிக அளவில் உள்ளது.

இந்த சீசனில் யார் வெற்றி வாகை சூடப் போகிறார் எனப் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். டபுள் எவிக்‌ஷன், போட்டியாளர்கள் ரீ-என்ட்ரி என நிகழ்ச்சி முழுக்கவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. 

விஷ்ணு

தற்போது வீட்டினுள் இருக்கும் போட்டியாளர்களுள் ஒருவர் விஷ்ணு. “வேணும்னே சண்டை போடணும், கத்தணும்னு கத்திட்டு இருக்காரா? இல்லை நிஜமாகவே இவருக்கு இவ்ளோ கோபம் வருமான்னு பலரும் விஷ்ணு குறித்து பல்வேறு விதமான கமென்ட்களைப் பதிவிட்டு வருகின்றனர். இவர் காதல் மன்னனா? இல்லை எமோஷனல் டைப்பா?” அவரை பேட்டி எடுத்த போது அவரைப் பற்றி அவரே நமக்குச் சொன்ன சில தகவல்கள்.

விஷ்ணுவின் குடும்பத்தில் யாரும் மீடியா ஃபீல்டு சார்ந்தவங்க இல்ல. அப்புறம் எப்படி இவர் மீடியாவுக்குள்ள வந்தார்னு கேட்டா அதுக்கு இவர் பெயர் கூட காரணமாக இருக்கலாமாம். அது என்ன பெயர்? விஷ்ணு நார்மலா எல்லாரும் வைக்கிற பெயர் தானேன்னு தானே யோசிக்கிறீங்க. விஷ்ணுவுக்குப் பெயர் வைத்தது `காதல் மன்னன்’ ஜெமினி கணேசன் தானாம். `ஜெமினி கணேசன் சாரும், எங்க தாத்தாவும் ஃப்ரெண்ட்ஸ். அவர் பெயர் வச்ச ராசியோ என்னவோ நான் இந்தத் துறைக்குள்ள வந்துட்டேன்’னு விஷ்ணு நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

விஷ்ணு

இரண்டு முறை பிக் பாஸ் வீட்டினுள் செல்வதற்காக பெரும் முயற்சியில் இருந்தவர் விஷ்ணு. இந்த முறையாவது வாய்ப்பு கிடைக்குமா? என எதிர்பார்த்துக் காத்திருக்கும்போதுதான் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்பது அவருடைய கனவு. அத்துடன் இது தனது கரியருக்கு நிச்சயம் பலன் அளிக்கும் என்கிற கணிப்புடன் நுழைந்திருக்கிறார். தன்னை வீட்டினுள் தக்க வைத்துக் கொள்வதற்காக இல்லாத விஷயத்தைக்கூட கன்டென்ட் என நினைத்து நிச்சயம் விஷ்ணு பெரிதுபடுத்த தான் செய்வார்’ என்கிறார்கள் விஷ்ணுவின் நண்பர்கள்.

`அமுல் பேபி’ என சத்யா சீரியல் மூலம் தனக்குக் கிடைத்த பிரபலத்தை பயன்படுத்திக் கொண்டு அடுத்தடுத்த வாய்ப்பை அமைத்துக்கொள்ள வேண்டும் என எண்ணியே பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கும் விஷ்ணு தற்போது ஒரு ஓடிடிக்காக தயாராகும் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். அதன் மூலம் இந்த பிரபலம் தன்னை நடிகனாக அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் என முழுமையாக நம்புகிறார்.  தனது விளையாட்டு யுக்தியை பயன்படுத்தி சிவப்பு கார்டு, மஞ்சள் கார்டு என வாங்காமல் ஃபைனல் வரைக்கும் விஷ்ணு செல்வாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

பூர்ணிமா, விஷ்ணு

பிக்பாஸ் வீட்டினுள் விஷ்ணுவின் கேம் பிளான் குறித்த உங்களுடைய கருத்துகளை மறக்காம கமென்ட் பண்ணுங்க!

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours