கங்கணா ரனாவத் சூட்டிங்கில் பங்கேற்ற ரஜினிகாந்த்: கங்கனா மற்றும் மாதவன் நடிக்க உள்ள படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. அந்த படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகை கங்கனா ரனாவத்:
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம்வந்துக் கொண்டிருப்பவர் நடிகை கங்கணா ரனாவத். 2006 ஆண்டு முதல் இந்தி திரைப்படங்களில் தோன்றி வருகிறார். கேங்ஸ்டர் படத்தில் நடித்ததற்காக பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகை விருதை வென்றார். இயக்குனரும் படப்பிடிப்பாளருமான ஜீவா இயக்கிய தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து பல ஹிந்து படத்தில் நடித்து வரும் கங்கனா அண்மையில் இவர் தமிழில் தலைவி மற்றும் சந்திரமுகி 2 படங்களிலும் நடித்து ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார். சந்திரமுகி 2 படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் கங்கணாவின் நடிப்பு பாராட்டுக்களை பெற்றது.
மாதவனுடன் இரண்டாம் முறை கங்கனா கூட்டணி:
இதற்கிடையில் ‘தனு வெட்ஸ் மனு’ எனும் வெற்றிப் படத்தில் இணைந்து நடித்த நடிகர் மாதவன் – நடிகை கங்கனா ரனாவத் ஜோடி, மீண்டும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளனர். தலைவி படத்துக்குப் பிறகு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் மீண்டும் இணைந்துள்ள படம் இதுவாகும். இந்த படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. நீரவ் ஷா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்தப் படத்தின் சூட்டிங் சில தினங்களில் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கும் நிலையில், தமிழ் – இந்தி என பை லிங்குவல் திரைப்படமாக இப்படம் தயாராக உள்ளது.
மேலும் படிக்க | பிக்பாஸ் 7 போட்டியில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர்தான்
இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றதாகவும், வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டு இப்படம் இருக்கும் எனவும் இன்று காலை தன் ட்விட்டர் பக்கத்தில் கங்கனா மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.
படபிடித்து தளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த திடீர் விசிட்:
இந்நிலையில் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் கதைக்களத்தில் தயாராக உள்ள இப்படத்தின் பூஜை, இன்று காலை சென்னையில் நடைபெற்ற நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிந்த கங்கனா “இந்திய சினிமாவின் தலைவர் எங்கள் பட செட்டுக்கு முதல் நாளிலேயே சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார். என்ன ஒரு அழகான நாள். மேடியை மிஸ் செய்கிறேன்” என டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
On our first day of the shoot God of Indian cinema Thalaivar himself thrilled us with a surprise visit on our set.
What a lovely day!! Missing Maddy @ActorMadhavan as he joins us soon @Tridentartsoffc @rajinikanth @sanjayragh pic.twitter.com/DNE87M9Uru— Kangana Ranaut (@KanganaTeam) November 18, 2023
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கங்கனா ரனாவத் இணைந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதற்கிடையில் கங்கனா ரனாவத் இந்திரா காந்தியாக நடித்துள்ள எமர்ஜென்சி திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ராணி போல் வாழும் ராஷ்மிகா.. மலைப் போல் குவியும் சொத்து, சம்பளம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு, ஆன்மீகம், ஆயிலகம் என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours