Bigg Boss Tamil 7 Red Card Contestant Pradeep Antony Girlfriend

Estimated read time 1 min read

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக பார்வையாளர்களை கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரெட் கார்டு வாங்கி வெளியேற்றப்பட்டவர், பிரதீப் ஆண்டனி. 

பிக்பாஸ் சீசன் 7:

ஆங்கிலம், இந்தி என பிற மொழிகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழில் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனை முதல் சீசனில் இருந்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது, இந்நிகழ்ச்சி 7வது சீசனை எட்டியுள்ளது. இதில், வலுவான போட்டியாளராக கருதப்பட்ட பிரதீப் ஆண்டனி, சில வாரங்களுக்கு முன்பு ரெட் கார்டு கொடுத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

மேலும் படிக்க | பிக்பாஸ் 7: பிரதீப் ஆண்டனி மொத்தமாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிரதீப் ஆண்டனி..

2016ஆம் ஆண்டு வெளியான அருவி படத்தில் நடிகராக அறிமுகமானவர், பிரதீப் ஆண்டனி. பிரபல நடிகரும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான கவினின் உயிர் நண்பர் இவர். பிரதீப், திரைப்படங்கள் இயக்க வேண்டும் என்ற கனவுகளோடு பிக்பாஸ் போட்டிக்குள் நுழைந்தார். இப்போட்டி ஆரம்பித்தது முதலே சக ஹவுஸ் மேட்ஸ்களுடன் சண்டை-சச்சரவில் ஈடு பட்டுவந்தார். எது செய்தாலும் அது போட்டிக்காகத்தான் என்ற காரணத்தையும் கூறி வந்தார். இந்த நிலையில்தான், இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்த கமல்ஹாசனின் எபிசோடில் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இது, ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிக்பாஸ் வீட்டில்தான் இவருக்கு பெரிதாக யாரும் குரல் கொடுக்கவில்லையே தவிர வெளியில் இவருக்கு பெரும் ஆதரவு திரண்டது. 

Pradeep GF

பிரதீப்பின் காதலி..

பிரதீப் ஆண்டனிக்கு காதலி இருப்பது, அவர் பிக்பாஸ் இல்லத்தில் இருந்த வரை யாருக்கும் தெரியாது. பிரதீப்பின் ரெட் கார்டு விவகாரத்தில், அவருக்கு ஆதரவாக முன்னாள் பிக்பாஸ் பாேட்டியாளர்கள் பலர் திரண்டனர். அதில் ஒருவர், சுரேஷ் சக்ரவர்த்தி. இவர், ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அந்த சேனலில், பிக்பாஸ் நிகழ்ச்சியை தினமும் ரிவ்யூ செய்து வருகிறார். இவரது சமீபத்திய எபிசோட் ஒன்றில் பிரதீப்பும் கலந்து கொண்டார். அப்போது சுரேஷ் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு பெண் பின்னால் வந்து நிற்க, அவரை காண்பித்து “பிரதீப்பை தாங்கிக்கொண்டிருக்கிறார்கள் கேர்ள் பிரண்டாக..அதனால் இவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்..” என்று கூறினார். ஆனால், இவரது பெயரோ அல்லது பிரதீப்பிற்கும் இவருக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது என்பது குறித்த எந்த தகவல்களோ வெளியாகவில்லை. 

பிரதீப்பிற்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது ஏன்? 

பிரதீப் ஆண்டனி, போட்டியின் முதல் நாளில்  இருந்தே தனது தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். சமயங்களில் கண்ட்ரோல் இல்லாமல் பேசி வந்த இவர், சிலரை தகாத வார்த்தைகளாலும் திட்டினார். ஒரு டாஸ்கின் போது கூல் சுரேஷை மிகவும் கெட்ட வார்த்தையிலும் ஒருமையிலும் பேசினார். இதனால், சில பிபி போட்டியாளர்கள் இவருக்கு எதிராக உரிமை குரல் தூக்க முடிவு செய்தனர். அதன்படி, அந்த வாரம் வந்த கமல்ஹாசனின் எபிசோடில் பிரதீப் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அப்போது பிரதீப்பால் பெண்கள் பாதுகாப்பின்மையோடு உணர்வதாக கூறினர். இதையடுத்து, போட்டியாளர்கள் ஒவ்வொருவரையாக அழைத்து கமல் “பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கலாமா வேண்டாமா” என்று கேட்டார். அதற்கு பெரும்பாலானோர் ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து பிரதீப் தனியாக அழைக்கப்பட்டு அப்படியே வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

மேலும் படிக்க | சித்தா to கோஸ்ட்-இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours