Jigardhanda DoubleX: “ஜிகர்தண்டா- 3 எடுக்க வாய்ப்பிருக்கிறது”- அப்டேட் சொன்ன கார்த்திக் சுப்புராஜ் |jigarthanda double x press meet at coimbatore

Estimated read time 1 min read

இந்நிலையில்  இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று கோவையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் பகிர்ந்த சில விஷயங்கள் இதோ! 

Jigardhanda Double X. Team

Jigardhanda Double X. Team

 பத்திரிகையாளர் சந்திப்பில் முதலில் பேசிய  எஸ்.ஜே.சூர்யா, “  ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தைப் பார்த்து விட்டு தலைவர் ரஜினிகாந்த் “குறிஞ்சி மலர்’ என்று  பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஜிகர்தண்டா முதல் பாகம் ரிலீஸிற்கு பின்  கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்குப் பிறகு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ரிலீஸ் ஆகி குறிஞ்சி மலர் என்ற  பெயரை  வாங்கி இருக்கிறது. பொதுவாக டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் இவ்வாறு கூறுவது உண்டு. ‘நாம நம்ம படத்தை பத்தி பேசக்கூடாது. நம்ப படம் தான் பேசணும்’.

ஆனால் இம்முறை பட ரிலீஸிற்கு முன்னரே கார்த்திக் சுப்பாராஜ் சொல்லிவிட்டார் இந்த படம் அவருடைய கரியரின் மிக நல்ல படங்களுள் ஒன்று என்று. என்னுடைய நடிப்புத்துறையில் ஒரு பிரேக் பாயிண்ட் ஆக இருந்தது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடித்த ‘இறைவி’ படம்தான். அதுபோல தான் இந்த படத்திலும் என்னை ஒரு ஹீரோவாக அங்கீகரித்திருக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸ் என்னுடைய நண்பர் மட்டும் அல்ல. திரையைத் தாண்டி நிஜ வாழ்விலும் அவர் ஒரு ஹீரோ” என்றார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours