இதையடுத்து தற்போது நடிகை கஜோல் தயாராகி வெளியே கிளம்புவது போன்ற போலியான வீடியோ ஒன்று வெளியாகி மீண்டும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
பொதுவாகவே ரீல்ஸ் டிரெண்டில் ‘Get Ready With Me’ என்ற டிரெண்ட் பிரபலமானது. அதாவது ஒருவர் எப்படி தன் அலுவலகத்துக்கோ, ஷாப்பிங்கிற்கோ தயாராகி வெளியே கிளம்புகிறார், என்னென்ன உடைகள் அணிகிறார், எந்தெந்த மேக்கப் சாதனங்களை உபயோகிக்கிறார் என்பதை எல்லாம் விரிவாகச் சொல்லுவார். இதன் மூலம் அந்தந்த உடை நிறுவனங்கள் மற்றும் மேக்கப் சாதனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விளம்பரம் கிடைக்கும். இதற்காக அந்த இன்ஃப்ளூயன்சருக்குப் பணமும் கொடுக்கப்படும். அத்தகைய ‘Get Ready With Me’ வீடியோ ஒன்றில்தான் கஜோலின் முகம் ‘Deepfake’ செய்யப்பட்டிருக்கிறது.
இப்படி நாளுக்கு நாள் பிரபலங்கள் மட்டுமல்லாமல் பல சாமானியப் பெண்களின் போலியான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகிக் கொண்டேதான் இருக்கின்றன. கட்டுப்பாடின்றி வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை, அரசு விரைவில் சட்டவிதிகளுக்குள் கொண்டுவர வேண்டும், இந்தக் குற்றவாளிகளுக்கு உரியத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
+ There are no comments
Add yours