அவர் பேசும்போது என் ரசிகர்களுக்காகன்னு குறிப்பிட்டு சொன்ன விஷயங்களும் ட்ரோல் மெட்டீரியல் ஆனது. இந்நிலையில், சரவண விக்ரமின் தங்கையும், காஸ்டியூம் டிசைனருமான சூர்யா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில்,
“பிக் பாஸ் பார்க்கிறதுக்கு எல்லாருக்குமே டைம் இருக்காது. பாதி பேர் பார்ப்பாங்க… பாதி பேர் நீங்க போடுற மீம்ஸ் அண்ட் ட்ரோல்ஸ் வச்சே பிக் பாஸ்ல இது தான் இப்ப போயிட்டு இருக்கு போல அப்படின்னு ஜட்ஜ் பண்ணுவாங்க. ஏன்னா எல்லாருக்குமே பிக் பாஸ் லைவ் பார்க்கிறதுக்கும், ஒரு மணி நேர எபிசோட் பார்க்கிறதுக்கும் டைம் இருக்காது. நீங்க பண்ற விஷயத்தை வச்சு ஓகே வீட்டுல இதுதான் பண்ணிட்டு இருக்காங்க போல… இப்படித்தான் போகுது போலன்னு உண்மை இல்லாத ஒரு விஷயத்தை உண்மைன்னு நினைச்சிடுவாங்க.
+ There are no comments
Add yours