Nana Patekar Apologized For Slapping A Kid Check Viral Video

Estimated read time 2 min read

பாலிவுட்டில் பிரபல நடிகராக விளங்குபவர், நானா படேகர். இவர், ஒரு சிறுவனை அடித்த வீடியோ சமீபத்தில் இணையதளம் முழுவதும் பரவியது. இதைத்தொடர்ந்து, தனது செயலுக்கு விளக்கம் கொடுத்து அவர் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். 

நானா படேகர்:

இந்தி, மராத்தி மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து பிரபலமானவர், நானா படேகர். முன்னாள் ராணுவ வீரராக இருந்த இவர், நடிகராக மாறினார். பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்த இவர் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் விளங்குகிறார். தனது நடிப்பிற்காக பல்வேறு விருதுகளையும் வாங்கியுள்ளார். இவர், 2008ஆம் ஆண்டு வெளியான பொம்மலாட்டம் படத்தில் திரைப்பட இயக்குநராக நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானார். கடைசியாக, பா.இரஞ்சித் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான ‘காலா’ படத்தில் அரசியல் வாதியாகவும், ஹீரோவுக்கு வில்லனாகவும் நடித்திருந்தார். 

சிறுவனை அறைந்த வீடியோ வைரல்..

நானா படேகர், தற்போது ‘ஜர்னி’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு வாரணாசியில் நடைப்பெற்று வருகிறது. அப்போது, ஒரு சிறுவன் இவரிடம் வந்து செல்ஃபி எடுத்தார். இதை பார்த்து கோபமான நானா படேகர், அச்சிறுவனை தலையிலேயே அடித்தார். இந்த வீடியோ, சமீபத்தில் இணையத்தில் வைரலானது. நானா படேகரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். 

விளக்கம் கொடுத்து வீடியோ..

நானா படேகர் சிறுவனை அடித்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அவர் நடித்து வரும் படத்தின் இயக்குநர் அனில் ஷர்மா ஊடகத்தினரிடம் பேசினார். அப்போது, நானா படேகர் செல்ஃபி எடுக்க வந்த சிறுவனை அறையவில்லை என்று கூறினார். இது, தங்களது புதிய படத்திற்காக படமக்கப்பட்ட ஒரு காட்சி என்று குறிப்பிட்டிருந்தார். 

மேலும் படிக்க | பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் இவர்தான்..! வீடியோ வெளியானது..

இயக்குநர் இது குறித்து பேசியுள்ளதை தொடர்ந்து, நடிகர் நானா படேகரும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், “நான் ஒரு சிறுவனை அடிப்பது போன்ற ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகளில் ஒன்றுதான் அது. அந்த காட்சிக்காக ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது இயக்குநர் என்னை ஆரம்பிக்க சொன்னார். அந்த வீடியோவில் இருக்கும் சிறுவன் யாரென்று எனக்கு தெரியவில்லை. அடிக்க வேண்டிய காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்ததால் அவரை படக்குழுவினரில் ஒருவர் என நினைத்து, அடித்து, காட்சிபடி இங்கிருந்து போ என்று கூறிவிட்டேன். அதன் பிறகுதான் அவர் படக்குழுவினர்களுள் ஒருவரில்லை என்பது தெரிந்தது . நான் மன்னிப்பு கேட்க மீண்டும் அவரை அழைத்தேன். ஆனால் அதற்குள் அவர் அங்கிருந்து போய் விட்டார். நான் எந்த போட்டோவிற்கும் நோ சொன்னதே இல்லை. நான் இதை செய்யவில்லை, இது ஒரு தவறுதான். இதனால் யாரேனும் என்னை தவறாக நினைத்து கொண்டிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். நான் இனி இது போன்ற எந்த செயலையும் செய்ய மாட்டேன்..” என்று கூறியிருக்கிறார். 

மேலும் படிக்க | அஜித்தை வைத்து படம் இயக்க காத்திருக்கும் அட்லீ! ஸ்க்ரிப்ட் ரெடி..அண்ணன் ரெடியா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours