‘ரெபெல்’ உண்மை கதை
13 நவ, 2023 – 11:56 IST
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ரெபல்’. அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில் தயாராகும் இந்த படத்தில் மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கடேஷ், ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசரில் இது உண்மை கதை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு இந்த படம் கேரள மாநிலம் பாலக்காட்டில் நடந்த தமிழர், மலையாளிகள் மோதலை மையமாக கொண்டு உருவாகி உள்ளதாக தெரிகிறது.
+ There are no comments
Add yours