`நவம்பர் 19 நிச்சயதார்த்தம்; விரைவில் திருமணம்!' சீரியலில் அடுத்த ஜோடி அரவிஷ் – ஹரிகா

Estimated read time 1 min read

`தென்றல்’ தொடரின் மூலம் சின்னத்திரையில் கவனம் பெற்ற நடிகர் அரவிஷ். இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் `சுந்தரி’ தொடரிலும், `இலக்கியா’ தொடரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவருக்கும் சன் டிவியில் ஒளிபரப்பான `திருமகள்’ தொடரின் கதாநாயகி ஹரிகாவிற்கும் திருமணம் நடைபெற இருக்கிறது.

அரவிஷ் – ஹரிகா

ஹரிகா `திருமகள்’ தொடரின் மூலம் தமிழ் சீரியல் உலகில் என்ட்ரியானார். தெலுங்கு தொடர்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் தமிழ் சீரியல் பக்கம் கவனம் செலுத்தினார். இந்தத் தொடர் இவருக்கென ஓர் அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. ஹரிகா ஆந்திர மாநிலம் அனந்தபூரைச் சேர்ந்தவர். அரவிஷ் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். இருவரும் காதலித்து வந்த நிலையில் அவர்களது திருமணம் குறித்த அறிவிப்பை தற்போது அறிவித்திருக்கின்றனர். 

ஹரிகாவும், அரவிஷூம் அவர்களுடைய சமூகவலைதள பக்கங்களில் சேர்ந்து ரீல்ஸ்கள் பதிவிட்டு வந்தனர். மேலும், அவர்கள் காதலிப்பதையும் வெளிப்படையாக அவர்களுடைய ரசிகர்களுக்கு அறிவித்திருந்தனர். இருவரது வீட்டிலும் காதலுக்குப் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ள நிலையில் அவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் வருகிற நவம்பர் 19ஆம் தேதி இரு வீட்டார் முன்னிலையில் நடைபெற இருக்கிறது.

அரவிஷ் – ஹரிகா

காதலர்களாக ரீல்ஸ் பதிவிட்டு வந்தவர்கள் இனி கணவன் – மனைவியாக வீடியோக்கள் அப்லோடு செய்யப் போகிறார்கள் என கமென்ட் பதிவிட்டு வாழ்த்துகின்றனர் ரசிகர்கள். இருவரும் சீரியல் நடிகர்கள் என்பதால் இவர்களுடைய நிச்சயதார்த்த நிகழ்வில் நிச்சயம் சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தெலுங்கு சீரியலில் நடித்துக் கொண்டிருந்த ஹரிகா அடுத்ததாக தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுப்பாரா எனத் தெரியவில்லை. 

வாழ்த்துகள் அரவிஷ் – ஹரிகா!

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours