Chithha Movie OTT Release Date When And Where To Watch Siddharth

Estimated read time 1 min read

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குநராக உள்ள எஸ்.யு.அருண்குமாரின் இயக்கத்தில் வெளியான படம், சித்தா. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. 

‘சித்தா’ திரைப்படம்:

கோலிவுட் உலகின் ‘சார்மிங் ஹீரோ’ என்ற பெயரை எடுத்தவர், சித்தார்த். இவர் தயாரித்து நடித்திருந்த படம், சித்தா. பண்ணையாரும் பத்மினியும், சிந்துபாத் போன்ற கவனத்தை ஈர்க்கும் படங்களை அளித்த எஸ்.யு அருண்குமார் இந்த படத்தையும் இயக்கியிருந்தார். சித்தப்பாவிற்கும் அவரது மகளுக்கும் இடையே இருக்கும் பாசத்தையும் உறவையும் பற்றி பேசும் படமாக இருந்தது, ‘சித்தா’. 

பாலியல் சீண்டல்களை பின்னணியாக கொண்ட கதை..

சித்தா திரைப்படம், பாலியல் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்படுவதை மையக்கருவாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில், குட் டச், பேட் டச், குழந்தைகளிடம் வரம்பு மீறி செயல்படுவோர் குறித்த விஷயங்கள் காண்பிக்கப்பட்டுள்ளன. இதுவரை விஜய் சேதுபதியை வைத்து மூன்று படங்களை இயக்கிய அருண், சித்தா படம் மூலம் முதன் முறையாக சித்தார்த்துடன் கைக்கோர்த்துள்ளார். இவர்களின் இந்த புது கூட்டணி நன்றாக உள்ளதாக ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்தன. 

ஓடிடியில் ரிலீஸ்:

சித்தா திரைப்படம், கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்துடன் சேர்ந்து வேறு சில புதுப்படங்களும் வெளியானதால், இப்படம் குறித்து பெரிதாக வெளியில் பேசப்படவில்லை. ஆனாலும், சித்தா படத்தை பார்த்தவர்கள் நல்ல விமர்சனத்தையே கொடுத்தனர். இப்படத்துடன் வெளியான பிற படைப்புகள் ஓடிடியில் வெளியாகி விட்டன. ஆனால் சித்தா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு மட்டும் வெளியாகமல் இருந்தது. இந்நிலையில், இது குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 

எந்த தளத்தில் எப்படி பார்ப்பது? 

சித்தா படத்தின் ஓடிடிய உரிமையை டிஸ்னி ஹாட்ஸடார் தளம் வாங்கியுள்ளது. இந்த தளத்திற்கு இந்திய அளவில் பெரிய பயனாளர்கள் கூட்டம் உள்ளது. டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் நவம்பர் 17ஆம் தேதி முதல் சித்தா படத்தை பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் சந்தா செலுத்து கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த படத்தை பார்க்கலாம். 

மேலும் படிக்க | தீபாவளிக்கு ஒளிபரப்பாகும் லேட்டஸ்ட் தமிழ் படங்கள்! எதை, எந்த சேனலில் பார்க்கலாம்?

சித்தா படத்தின் வசூல்..

சித்தா திரைப்படம், பழனி மற்றும் சென்னையின் புறநகர் பகுதியில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் நடித்தவர்களுள் சித்தார்த்தை தவிர பிற யாரையும் பெரிதாக யாருக்கும் வெளியில் தெரியாதவர்களாக இருந்தனர். நாயகியாக வரும் மலையாள நாயகி நிமிஷா, பல மலையாள படங்களிலும் ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இப்படம் மொத்தமாகவே 6 கோடி செலவில்தான் உருவானதாக கூறப்படுகிறாது. ஆனால், படம் 20 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அருண்குமாரின் அடுத்த படங்கள்..

சித்தா படத்தின் இயக்குநர் எஸ்.யு அருண்குமார், அடுத்து தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோ ஒருவருடன் கைக்கோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சித்தா படத்தின் வெற்றியை தொடர்ந்து, இவர் பொன்னியின் செல்வன் நாயகன் விக்ரமிடம் கதை சொல்லி ஓகே வாங்கியுள்ளாராம். இதுவும், அருண்குமாரின் வழக்கமான வலுமிக்க கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். 

மேலும் படிக்க | பிக்பாஸ் 7 போட்டியில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர்தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours