ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினி
12 நவ, 2023 – 12:09 IST
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் போயஸ் கார்டனில் தனது வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் கையசைத்து தீபாவளி வாழ்த்து கூறினார். ரஜினியை பார்த்த உற்சாகத்தில் ரசிகர்களும் ‛தலைவா, தலைவா’ என ஆர்பரித்து தீபாவளி வாழ்த்து கூறினர்.
கமல் வாழ்த்து
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட வாழ்த்து செய்தி:
விடிவானில் ஒளிர்மீன்கள்
விண்ணெல்லாம் ஒளிரட்டும்
ஐப்பசியின் மழைப்பொழிவில்
அகமெல்லாம் மலரட்டும்
ஆகாயம் பார்த்திருக்கும்
அருமைநிலம் செழிக்கட்டும்
தீபாவளி நாளில்
திசையெட்டும் பொலியட்டும்.
+ There are no comments
Add yours