Zee Tamil’s Exciting Diwali Plan: Awards, Movies, and More! | தீபாவளிக்கு செம அதிரடி ட்ரீட்.. அசத்தலான பிளானுடன் களமிறங்கும் ஜீ தமிழ் – முழு விவரம் இதோ

Estimated read time 1 min read

தொலைக்காட்சி சேனலும் மக்களை மகிழ்விக்கும் வகையில் புதுபுது புக்திகளை கையாண்டு வருகிறது. அதே போல் பண்டிகை தினங்களில் மக்களை மகிழ்ச்சி படுத்துவதிலும் ஜீ தமிழ் எப்போதும் முக்கிய பங்காற்றி வருகிறது. அந்த வகையில் இந்த வருட தீபாவளிக்கு என்னவெல்லாம் ஸ்பெஷல் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.  அதாவது காலை 8 மணி முதல் 9.30 மணி வரை சுகி சிவம் தலைமையில் உணவு பற்றிய விழிப்புணர்வு. வளர்ந்து உள்ளதா? குறைந்துள்ளதா? என்ற தலைப்பில் மோகன சுந்தரம், ஆர் ஜே ஆனந்தி, நீலகண்டன், பர்வீன் சுல்தானா, சாந்தமணி, சிவா சதீஸ் ஆகியோர் பங்கேற்கும் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது. 

மேலும் படிக்க | மீண்டும் திருமண வாழ்க்கையில் இணையும் ஐஸ்வர்யா-தனுஷ் ஜோடி..! உண்மை என்ன..?

அதனை தொடர்ந்து காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை ஆர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படமாக காதர்  பாஷா திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. பிறகு மதியம் 12.30 மணி முதல் மக்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஜீ தமிழ் குடும்ப விருதுகள் விழா மிகவும் கோலாகலமாக ஒளிபரப்பாக உள்ளது.  ஜீ தமிழ் குடும்ப விருதுகள் மூலமாக ஜீ குடும்பத்தின் பிரபலங்களின் திறமைகளை ஊக்குவித்து அவர்களுக்கு மகுடம் சூட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் விழாவை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான ஜீ தமிழ் குடும்ப விருதுகள் விழாவிற்கான ஷூட்டிங் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.இதனை தொடர்ந்து ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2023-ன் முதல் பாகம் கடந்த ஞாயிறு அன்று கோலாகலமாக நடந்து முடிந்தது. 

ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2023 நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் நவம்பர் 12-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பேவரைட் நடிகர்கள், பேவரைட் சீரியல், பெஸ்ட் சீரியல், பெஸ்ட் நடிகர்கள் என பல கேட்டரிகளுக்கு விருதுகள் வழங்கப்படும் என எதிர்பார்ப்படுகிறது. இந்த பகுதியில் கிட்டத்தட்ட 1 மாதம் கேம்பைன் நடத்தி தகுதியான மணமக்களை தேர்வு செய்து அவர்களுக்கு 5 சவரன் நகை அளித்து ஜீ தமிழ் பிரபலங்கள் முன்னிலையில் தொலைக்காட்சி சேனல் நடத்தி வைத்த பிரம்மாண்டமாக திருமணம் நடத்தி வைத்தது. திருமணம் முடிந்ததும் மணமக்களின் உணர்வுபூர்வமான தருணங்ளை பகிர்ந்து கொண்டனர். 

அதனை தொடர்ந்து பேவரைட் நடிகருக்கான விருதை வென்ற கார்த்திக் ராஜ்க்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்றுடன் விருது வழங்கப்பட்டுள்ளது. அதே போல் விருதுகளை வென்றவர்களுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ், அவர்கள் கடந்த வந்த பாதைகள் என நெகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்த பகுதியாக பார்ட் 2 ஒளிபரப்பாக உள்ளது. மேலும் மாரி சீரியல் நாயகியான ஆஷிகா படுகோனே தமிழ், தெலுங்கு, பெங்காலி, போஜ்புரி என நான்கு மொழிகளிலும் நாயகியாக நடித்து வருவதால் அவருக்கு பான் இந்தியா ஸ்டார் விருதை வழங்கி நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் வழங்கியுள்ளார். ஆஷிகாவிற்கு நான்கு மாநிலத்தை சேர்ந்த ரசிகர்களும் ஒன்று சேர்ந்து பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். 

இப்படி பல உணர்வுபூர்மான தருணங்களுடன் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் பகுதி 2 ஒளிபரப்பாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சியின் முதல் பாகம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது போல இரண்டாவது பாகமும் மாஸ் காட்டும் என எதிர்பார்க்கலாம். தீபாவளி தினத்தில் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் விழா பார்ட் 2-வை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

அடுத்ததாக மாலை 4.30 மணி முதல் சந்தானம் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற காமெடி கலந்த திகில் த்ரில்லர் திரைப்படமான DD ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இறுதியாக இரவு 7 மணி முதல் 10 மணி வரை சரிகமப சுட்டிஸ் பங்கேற்கும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அதிரடியான நிகழ்ச்சிகளுடன் ஜீ தமிழுடன் இணைந்து தீபாவளியை கொண்டாட தயாராகுங்கள்.

மேலும் படிக்க | அண்ணா சீரியல்: சண்முகத்தை கொல்ல வந்த மனோஜ்.. ரத்னாவுக்கு வரும் சிக்கல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours