வடசென்னையின் அசல் முகங்கள் – கோபி நயினாரின் ‘கருப்பர் நகரம்’ டீசர் வெளியீடு | Karuppar Nagaram Teaser released

Estimated read time 1 min read

சென்னை: கோபி நயினார் இயக்கத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜேடி சக்கரவர்த்தி நடிக்கும் ‘கருப்பர் நகரம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் கோபி நயினார். அந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மனுஷி’ படத்தை இயக்கினார். வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் நிறுவனம் தயாரித்த அந்தப் படம் பற்றிய தகவல் பின்னர் வெளியாகவில்லை.

இந்நிலையில், கோபி நயினார் இயக்கும் அடுத்தப் படத்துக்கு ‘கருப்பர் நகரம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜேடி சக்கரவர்த்தி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் தலைப்பு அறிவிப்பு போஸ்டர் சில தினங்கள் முன்பு வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. எம்ஜிஆர் பாடலுடன் தொடங்கும் இதன் டீசர் 1.28 நிமிடங்கள் ஓடுகிறது. வடசென்னையின் அசல் முகங்களை காண்பிக்கும் டீசர் காட்சிகளில் ‘உடம்புல ரத்தம் சூடா இருக்குற வரைக்கும் தான் சண்டை செய்ய முடியும்’ என்பது மாதிரியான பவர்புல் வசனங்களும், சண்டைக் காட்சிகளும் கவனம் ஈர்க்கின்றன.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours