கதை மீது பயம் வந்ததால் இயக்குனர் ஷங்கரை தேடி சென்றேன்: கார்த்திக் சுப்புராஜ்

Estimated read time 1 min read

கதை மீது பயம் வந்ததால் இயக்குனர் ஷங்கரை தேடி சென்றேன்: கார்த்திக் சுப்புராஜ்

10 நவ, 2023 – 12:04 IST

எழுத்தின் அளவு:


I-was-afraid-of-the-story-so-I-went-looking-for-director-Shankar:-Karthik-Subbaraj

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெகு சில படங்களிலேயே தனது திறமையை நிருபித்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்தை வைத்து ‛பேட்ட’ படத்தை இயக்கும் அளவிற்கு வெகு விரைவில் முன்னேறினார். அதைத் தொடர்ந்து அவர் அடுத்தடுத்து இயக்கிய ஜகமே தந்திரம், மகான் ஆகிய படங்கள் வரவேற்பை பெற தவறின. இந்நிலையில் தற்போது ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமாக ஜிகர்தண்டா டபுளஎக்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இன்று (நவ-10) அந்த படம் வெளியாகி உள்ளது.

இன்னொரு பக்கம் தெலுங்கில் ராம்சரணை வைத்து இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்திற்கான கதையையும் கார்த்திக் சுப்புராஜ் தான் எழுதியுள்ளார். சமீபத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது கேம் சேஞ்சர் படம் குறித்தும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார் கார்த்திக் சுப்புராஜ்.

அப்போது அவர் கூறும்போது, கேம் சேஞ்சர் படத்தின் கதையை உருவாக்கிய பின்னர்தான் அது மிகப்பெரிய அளவில் ஒரு அரசியல் கதையாக உருவாகி இருந்ததை உணர முடிந்தது. இந்த படத்தை இயக்குவதற்கு ஷங்கர் போன்ற இயக்குனர்கள் தான் சரியான நபர்களாக இருக்க முடியும் என நினைத்து இந்த கதையை அவரிடம் கூறினேன். அவருக்கும் இந்த கதை பிடித்திருந்தது.

அதே சமயம் அந்த படத்தின் கதைக்கான ஐடியா என்னுடையது தான் என்றாலும் அதை இயக்குனர் ஷங்கர் அவரது பாணியில் பிரமாண்டமாக உருவாக்கி விட்டார். இந்த படத்தின் காட்சிகள் பற்றி நாங்கள் ஒவ்வொரு முறையும் விவாதிக்கும்போது ஒரு சிறிய விஷயத்தை கூட மிகப்பெரிய அளவில் அவர் மாற்றுவதை பார்த்து பலமுறை ஆச்சரியப்பட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours