தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம், ஜிகர்தண்டா டபுள்X (Jigarthanda DoubleX). இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் இன்று ரிலீஸாகியுள்ளதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் இப்படத்திற்கு விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.
ஜிகர்தண்டா டபுள்X:
பீட்ஸா, பேட்ட, ஜிகர்தண்டா உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்து தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தவர், கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் படம் ஜிகர்தண்டா டபுள்X.இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 2014ஆம் ஆண்டு ஜிகர்தண்டா படத்தின் முன்கதையாக இப்படத்தின் கதை இடம் பெற்றுள்ளது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருக்கும் இந்த படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை (Jigarthanda DoubleX Twitter Review) பெற்று வருகிறது.
ட்விட்டரில் பாசிடிவான விமர்சனங்கள்:
ஜிகர்தண்டா டபுள்X படத்திற்கு ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பலரும் பாசிடிவான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். அந்த விமர்சனங்களை இங்கு பார்போம்.
ஒரு ரசிகர், படத்தின் முதல் பாதி முடிந்தவுடன் ஒரு விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். அதில், படத்தின் முதல் பாதி சரமாரி சம்பவமாக உள்ளதாக அந்த ரசிகர் தெரிவித்திருக்கிறார். நம்பிக்கை இல்லாமல் இதனை ஒரு இயக்குநரால் செய்திருக்க முடியாது எனவும் அந்த ரசிகர் தெரிவித்திருக்கிறார்.
#JigarthandaDoubleX Interval – Bad, bold and mad – and still works !
What @karthiksubbaraj has done close to interval , you cannot do it without conviction !
A treat so far !!
— Prashanth Rangaswamy (@itisprashanth) November 10, 2023
இதுவரை படம் நன்றாக இருப்பதாக அந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | சினிமா ரசிகர்களை உற்சாகத்தில் தள்ளப்போகும் இந்த 10 தமிழ் படங்கள்!
வித்தியாசமான ராகவா லாரன்ஸ்!
ராகவா லாரன்ஸ், பல தமிழ் பேய் படங்களில்தான் நடித்துள்ளார். அதைத்தாண்டி அவரை வேறு ஒரு கதாப்பாத்திரமாக வெகு சில படங்களில் மட்டுமே பார்க்க முடிந்தது. அந்த வகையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் அவர் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருப்பதாக ஒரு ரசிகர் குறிப்பிட்டுள்ளார்.
First Half : No lag what so ever !! @offl_Lawrence Intro theri mass .. Not the usual raghava lawrence master u will see !! Bgm andhar mass @Music_Santhosh !! #JigarthandaDoubleX
— (@Aandavanirukan) November 10, 2023
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், படத்தில் ராகவா லாரன்ஸிற்காக வைக்கப்பட்டிருக்கும் இண்ட்ரோ காட்சி மாஸாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
“அந்த படத்தை விட அருமையா இருக்கு..”
ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் படம் குறித்த ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கார்த்திக் சுப்புராஜ் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, முதல் படமான ஜிகர்தண்டாவை விட இந்த படம் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார். அவர் சொன்னது போலவே அதை விட இந்த படம் நன்றாக உள்ளதாக ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார்.
#JigarthandaDoubleX is better than the first Jigarthandha in my opinion. It is a masterpiece and will be celebrated for many years to come. Hats off @karthiksubbaraj and thank you for your magic @Music_Santhosh feels like my palette has been cleansed! Diwali winner
9/10
— Luciferrr (@Luci_Moonlight) November 10, 2023
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் இந்த படத்தை இன்னும் பல வருடங்களுக்கு ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ‘ஜப்பான்’ படம் எப்படியிருக்கு? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours