Jigarthanda Double X Review: மதுரை டானின் சினிமா ஆசை; களமிறங்கும் இயக்குநர்; ஜிகர்தண்டா XX வென்றதா?|Karthick Subburaj Jigarthanda Double X movie review

Estimated read time 1 min read

இவர்களுடன் ஒப்பிடுகையில் கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் அதை நிறைவாகச் செய்திருக்கிறார் நிமிஷா சஜயன். இவர்கள் இல்லாமல் இளவரசு, ஷைன் டாம் சாக்கோ, சத்யன், அரவிந்த் ஆகாஷ், ஆதித்யா பாஸ்கர், என பெரும் நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறது. இவர்களுக்கும் சிறிய வேடங்கள்தான் என்றாலும் குறைந்தது ஒரு காட்சியிலாவது அனைவரும் ஸ்கோர் செய்துவிடுகிறார்கள். தமிழ் சினிமாவில் பல படங்களில் சிறு பாத்திரங்களில் தலைகாட்டிய தேனி முருகன் நிமிஷா சஜயனின் தந்தையாக கவனிக்க வைக்கிறார். இரக்கமற்ற காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நவீன் சந்திராவும் வில்லத்தன நடிப்பால் கவர்கிறார்.

படத்தின் மூன்றாவது நாயகன் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு. மலைவாழ் மக்களின் வாழ்விடம், யானைகள் சுற்றித்திரியும் வனம், அன்றைய வண்ணமிகு மதுரை, வின்டேஜ் திரையரங்கம் எனக் காட்சிகள் பல்வேறு இடங்களுக்கு மாறினாலும் அந்த அந்த இடங்களுக்கான அழகியலைத் தவறவிடாமல் அவற்றைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது அவரது கேமரா. 

1970-களில் நடக்கும் கதை என்பதால் ஓவர்டைம் உழைத்திருக்கிறது கலை இயக்குநர் டி.சந்தானம் & டீம். அந்த காலகட்டத்தை அப்படியே கண்முன் கொண்டு வர மெனக்கெட்டிருக்கிறார்கள். சமீபத்தில் மறைந்த அவரின் கலைநேர்த்தியை எடுத்துச்சொல்லும் படமாக இது நிச்சயம் இருக்கும். ஷபிக் முகமது அலியின் எடிட்டிங்கும் மிகச்சிறப்பு. நீளத்தை மட்டும் இன்னும் கூட குறைத்திருக்கலாம் சாரே!

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours