The Trail Telugu Movie Releasing On November 24th In Theaters | The Trail தெலுங்கில் வெளியாகும் முதல் விசாரணை திரைப்படம்

Estimated read time 1 min read

எஸ்எஸ் பிலிம்ஸ் மற்றும் காமன் மேன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் தான் The Trail. தெலுங்கு சினிமாவின் முதல் விசாரணை திரைப்படமாக உருவாகி உள்ளது.  இந்த திரைப்படத்தை ராம் கன்னி இயக்கியுள்ளார். ஸ்பந்தனா பாலி, யுக் ராம் மற்றும் வம்சி கொடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் தயாரிப்பாளர்களான ஸ்மிருதி சாகி மற்றும் ஸ்ரீனிவாச நாயுடு கில்லாடா மற்றும் இணை தயாரிப்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகியோர் இந்த புதிய வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர்.  தி ட்ரைல் (The Trail) படத்திற்கு சரவண வாசுதேவன் இசையமைக்க, சாய் குமார் தாரா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க | லியோ படம் இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

படக்குழுவால் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஏற்கனவே குறிப்பிடத்தக்க வகையில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கி, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படத்தின் வெளியீட்டு தேதிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில், ​​மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தி ட்ரைல் (The Trail) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  வரும் நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் தி ட்ரைல் படம் வெளியாக உள்ளது.  குறிப்பிடத்தக்க வகையில், திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த ஸ்பந்தனா பாலி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே நேரத்தில் “Kanabuduta ledu” படத்தில் நடித்த யுக் ராம் இந்த படத்திலும் நடித்துள்ளார். 

தி ட்ரைல் படத்தின் டீஸர் அவரது கதாபாத்திரத்தைச் சுற்றியுள்ள மர்மத்தைக் குறிக்கும் வகையில் தான் இருந்தது.  யூடியூப் உலகில் தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள வம்சி கொடு போலீஸ் அதிகாரியாக அழுத்தமான பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இயக்குனர் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி என்பதால் ஒரு தனித்துவமான கதையில், பல நிஜ உலக காட்சிகளை திரைக்கதையில் சேர்த்துள்ளார். இதனால் கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு நல்ல அனுபவத்தை தரும்.  தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதுவித சினிமா அனுபவத்தை தி ட்ரைல் படம் தர உள்ளது.  

தொழில்நுட்ப துறை:
கதை, திரைக்கதை, இயக்கம்: ராம் கன்னி
தயாரிப்பாளர்: ஸ்மிருதி சாகி, சீனிவாச நாயுடு கில்லாடா.
இணை தயாரிப்பாளர்: சுதர்சன் ரெட்டி.
நிறுவனம்: எஸ்எஸ் பிலிம்ஸ், காமன் மேன் புரொடக்ஷன்ஸ்.
ஒளிப்பதிவு இயக்குனர்: சாய் குமார் தாரா.
எடிட்டர்: ஸ்ரீகாந்த் பட்நாயக் ஆர்
இசை: சரவண வாசுதேவன்
இணை இயக்குனர்: சேகர் கும்பட்லா.
விளம்பரம்: ட்ரெண்டி டோலி PR

மேலும் படிக்க | கமல்ஹாசனின் ஆபிஸ் ரூமை பார்த்துள்ளீர்களா..? ‘இந்த’ வீடியோவில் பாருங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours