கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்று தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தின்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தீபா விஷயத்தில் கார்த்திக் எடுத்த முடிவு.. புதிய காதல் பயணத்தில் கார்த்திகை தீபம் – இன்றைய எபிசோட் அப்டேட்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபா கார்த்திக்கின் கம்பெனிக்கு வேலை தேடி வந்து கேட்ட கேள்விகளுக்கு அசால்ட்டாக பதிலளித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மேலும் படிக்க | நடிகர் யோகிபாபுவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரல்!
அதாவது, கார்த்திக் நேர்காணலில் பங்கேற்றவர்களில் தீபா திறமைசாலியாக இருப்பதால் அவளையே வேலைக்கு எடுக்கலாம் என முடிவு செய்கிறான், அதே சமயம் வெளியில் காத்திருக்கும் தீபா நமக்கு இந்த வேலை கிடைக்காது என முடிவு செய்து எழுந்து கிளம்பி விடுகிறாள். இங்கே கார்த்தி சினேகாவை அழைத்து அந்த பெண்ணையே வேலைக்கு எடுத்து விடலாம் வர சொல்லுங்க என்று சொல்ல இவள் தான் அழைத்து வந்த பெண் என நினைத்து சந்தோசப்பட கடைசியில் கார்த்திக் சொன்னது தீபாவை தான் என தெரிந்து ஷாக் ஆகிறாள்.
வேறு வழியில்லாமல் தீபாவை உள்ளே அழைத்து செல்ல கார்த்திக் நீங்க இங்கேயே வேலை செய்யலாம், நீங்க எதிர்பார்க்குற சம்பளத்தை நாங்க தரும் என்று சொல்ல தீபாவும் அதை ஏற்று கொள்கிறாள். பிறகு இருவரும் காரில் வந்து கொண்டிருக்கும் போது தீபா இந்த விஷயம் வீட்டிற்கு தெரிய வேண்டாம் என்று சொல்ல கார்த்திக் வீட்டில் இதை பற்றி பேசி கொள்ள வேண்டாம்.
அதே போல் ஆபிசில் நாம கணவன் மனைவி என்பதை காட்டி கொள்ளவும் வேண்டாம் என்று கார்த்திக் பதில் கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
மேலும் படிக்க | The Trail – தெலுங்கில் வெளியாகும் முதல் விசாரணை திரைப்படம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours