‘விஜய் 68’ அப்டேட் | தாய்லாந்தில் படமாக்கப்பட்ட சண்டைக் காட்சி! | thalapathy Vijay 68 Update | Fight scene filmed in Thailand venkat prabhu

Estimated read time 1 min read

பாங்காக்: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தான் நடிக்கும் 68-வது படப்பிடிப்பு பணிக்காக தாய்லாந்து சென்றுள்ளார் நடிகர் விஜய். இந்த சூழலில் அங்கு இந்தப் படத்தின் பிரதான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா, எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முன் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது படக்குழு தாய்லாந்து சென்றுள்ளது.

“இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வெங்கட் பிரபு. அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். ‘தளபதி 68’-ல் இன்னும் நிறைய ஷூட் மற்றும் பல்வேறு கட்ட ஷெட்யூல் உள்ளது. தாய்லாந்தில் பிரதான சண்டைக் காட்சியை இரவு நேரத்தில் ஷூட் செய்தோம். அதனால் உங்கள் பிறந்தநாள் அன்று உங்களுக்கு விடுப்பு அளிக்கப்படுகிறது” என அர்ச்சனா எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். நேற்று (நவ.7) வெங்கட் பிரபுவுக்கு பிறந்தநாள்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours