Twit And Shocking Secret Reveald In Nala Damayanthi Serial Nov 8 | பரபரப்பான கட்டத்தில் நள தமயந்தி சீரியல்

Estimated read time 1 min read

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. தொலைக்காட்சி சேனலும் தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களமிறக்கி மக்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் அக்டோபர் 9ஆம் தேதி முதல் ‘நளதமயந்தி’ என்ற பெயரில் புதிய சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. நளதமயந்தி சீரியல் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

நளதமயந்தி இன்றைய எபிசோட் அப்டேட்:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நளதமயந்தி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் 

நளன் அன்னபூரணி மெஸ்க்கு வந்து ஓனரை சந்திக்க வர தமயந்தியை வேலைக்காரி என நினைத்து கொள்கிறான், நான் இந்த மெஸோட ஓனரை பார்க்கணும் என்று சொல்ல அவங்க இங்க ஏன் வர போறாங்க நாளைக்கு காலையில் 4 மணிக்கு காளியம்மன் கோவிலுக்கு போவாங்க என்று சொல்லி அனுப்பி வைக்க மறுநாள் நளன் கோவிலில் வைத்து சந்திக்க முடிவெடுக்கிறான். கோவிலுக்கு வந்த நளனுக்கு தமயந்தி தான் ஓனர் என்ற உண்மை தெரிய வருகிறது.

இங்கே வீட்டில் பெரியப்பா சிவலிங்கம் சீட்டு பணத்தை எடுத்து லாட்டரி விளையாடி தோற்று விட தமயந்தி தான் மெஸ்ஸை காப்பாற்ற பணத்தை திருடியதாக பழி வந்து சேர கடையில் அவளை கைது செய்ய போலீஸ் வருகிறது.

மேலும் படிக்க | Leo Day 6 Box Office: 6 நாளில் 250 கோடி வசூலா? மிரட்டும் விஜய்யின் லியோ

டைசி நொடியில் உண்மையான குற்றவாளி சிவலிங்கம் தான் தெரிய வந்து அவரை கைது செய்ய போகும் சமயத்தில் தமயந்தி அந்த பணத்தை நான் கொடுத்து விடுகிறேன் என வாக்கு கொடுத்து பிரச்சனையில் சிக்கி கொள்கிறாள். 

இன்னொரு பக்கம் தாத்தா கந்து வந்து காரனை அழைத்து மெஸ்ஸை விற்க ஏற்பாடு செய்ய மறுபக்கம் தமயந்தி பணத்திற்காக ஏ.ஆர் கொடுத்த டீலை ஏற்க முடிவெடுக்கிறாள், தினமும் அவரது ரெஸ்டாரண்ட் சென்று ரெசிபியை சொல்லி கொடுக்க முடிவெடுத்து அக்ரீமெண்ட்டில் கையெழுத்து போட போக நளன் இதை பார்த்து விடுகிறான், இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என பிளான் போடுகிறான். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? தமயந்தி பிரச்சனையில் இருந்து வெளிய வர போவது எப்படி? மெஸ்ஸை கைப்பற்ற நளன் செய்ய போவது என்ன? என்ற பரபரப்பான திருப்பங்களுடன் நளதமயந்தி சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே நளதமயந்தி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு இவ்வளவு செல்வமா? இதோ சொத்து மதிப்பு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours