Thug Life Movie Update Why Kamalhaasan And Maniratnam Did Not Work Together For 36 Years | கமல் மணிரத்னம் 36 ஆண்டுகள் ஏன் இணைந்து பணியாற்றவில்லை தெரியுமா

Estimated read time 1 min read

நாயகன் வெளியாகி 36 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இயக்குனர் மணிரத்னம் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இணைந்து பணியாற்ற உள்ளனர்.  கமலின் 234வது படமான KH 234 படத்தை மணிரத்னம் இயக்க உள்ளார்.  இதற்கான அறிவிப்பு முன்னரே வெளியான நிலையில், புரமோ வீடியோ கமலின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.  KH 234 என்று தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டு இருந்த இந்த படத்திற்கு Thug Life என்று அதிகாரப்பூர்வமான தலைப்பையும் வைத்துள்ளது படக்குழு. இந்த புரமோ வீடியோவில் கமல்ஹாசன், “என் பெயர் ரங்கராயர் சக்திவேல் நாயகர். எனக்கு யாகுசா என்று முத்திரை குத்தப்பட்டது.  இது கேங்க்ஸ்டர் என்று அர்த்தம்,” என்று அவர் தனது தற்காப்பு கலை திறன்களை வெளிப்படுத்தும் முன் கூறுகிறார். 

மேலும் படிக்க | கமல்ஹாசனின் ஆபிஸ் ரூமை பார்த்துள்ளீர்களா..? ‘இந்த’ வீடியோவில் பாருங்கள்! 

யாரும் எதிர்பார்த்திடாத வகையில் இந்த டீசர் வீடியோ இருந்தது.  மேலும், படத்தின் தலைப்பும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.  மேலும் இந்த படத்தில் பல நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் துல்கர் சல்மான், “கமல் சார் மற்றும் மணி சார் படத்தில் இணைவதில் மகிழ்ச்சி.  இது வாழ்நாள் முழுவதும் ஒரு கற்றல் வாய்ப்பு.  #KH234 படத்தில் நடிப்பது ஆசீர்வதிக்கப்பட்ட” என்று கூறியுள்ளார்.  முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவரால நடிக்க முடியவில்லை.  துல்கர் சல்மான் ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் ‘ஓ காதல் கண்மணி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

வித்யாபாலனுக்கு பதில் த்ரிஷா கிருஷ்ணன்

இப்படத்திற்கான் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வித்யாபாலனிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.  ஆனால், அந்த வாய்ப்பை திரிஷா தட்டி பறித்துள்ளார். கமல்ஹாசன் படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது உறுதியாகி உள்ளது.  “கனவுகள் பலமுறை நனவாகும் போது ஆசீர்வதிக்கப்பட்டேன். #KH234 படத்தில் மணி சார் & கமல் சாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று த்ரிஷா கூறியுள்ளார்.  மேலும், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜெயம் ரவி இந்த படத்தில் நடிக்கிறார்.  முன்னதாக மணிரத்னம் இயக்கி இருந்த பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து இருந்தார் ஜெயம் ரவி.  நயன்தாரா, பங்கஜ் திரிபாதி மற்றும் ஆனந்திதா ஆகியோரும் இந்த படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.  மெட்ரா டாக்கீஸுடன் இணைந்து ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கப்படும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

கமல் – மணிரத்னம்

மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இருவரும் மிகவும் மதிக்கப்படும் மற்றும் வெற்றிகரமான திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்.  மணிரத்னமும் கமல்ஹாசனும் 1980களின் பிற்பகுதியில் கொடிகட்டி பறந்தனர்.  இருவரும் இணைந்து 1987ம் ஆண்டு நாயகன் படத்தில் பணிபுரிந்தனர்.  இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றது.  ஆனால், அந்தப் படம் வெளியான பிறகு வேறு எந்த ஒரு படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. இதற்குப் பல காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் தங்கள் தனிப்பட்ட பார்வை மற்றும் விஷயங்களை பின்பற்றியவர்கள். மற்றொரு காரணம், இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் அல்லது தனிப்பட்ட விஷயங்களில் பிரச்சனைகள் இருந்ததாக கூறப்படுகிறது.  இதன் காரணமாக தான் இருவரும் இத்தனை ஆண்டுகள் இணையவில்லை என்று கூறப்படுகிறது.  

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யாவிற்கு பதில் ‘இவர்’ நடிக்க இருந்தார்! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours