“ஜீ’ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `கார்த்திகை தீபம்’ தொடரில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர் அர்த்திகா. வெள்ளித்திரையில் நடித்துக் கொண்டிருந்தவர் இந்தத் தொடரின் மூலம் சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
அர்த்திகா கேரள மாவட்டம் கோட்டயத்தைச் சேர்ந்தவர். `பிளாக் அண்ட் வொயிட்’ என்கிற திரைப்படத்தில் கார்த்திக்குடன் இணைந்து நடித்திருக்கிறார். அதன் பிறகு இந்தத் தொடரில் இருவரும் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஜோடிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது.
சமீபத்தில் நடைபெற்ற ‘ஜீ’ குடும்ப விருதுகள் விழாவில் இவர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 6ஆம் தேதி அர்த்திகாவிற்கு கேரளாவில் நடைபெற்றது. தனது காதலனை கரம்பிடித்திருக்கும் அர்த்திகா அவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். அதில், ‘எனது வாழ்க்கையின் சிறந்த தருணங்கள்’ என்கிற கேப்ஷனையும் குறிப்பிட்டிருக்கிறார்.
வாழ்த்துகள் அர்த்திகா!
+ There are no comments
Add yours