தனுஷின் கேப்டன் மில்லர் ரிலீஸ் தேதி வெளியீடு: நடிகர் தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் திரைப் படத்தின் வெளியீடு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனம் சற்று முன் அறிவித்துள்ளது.
கேப்டன் மில்லர் திரைப்படம்:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் தனுஷ் தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் அப்டேட்கள் மூலம் ரசிகர்களை குஷி படுத்தி உள்ளார். கடைசியாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அருண் மாதேஸ்வர் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடம் இந்த திரைப்படத்தில் ஷிவராஜ் குமார், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மக்களிடையே மிரட்டியதுடன், படத்தின்மீதான எதிர்பார்ப்பையும் எகிற செய்தது. அதுமட்டுமின்றி கடந்த ஆறு மாதங்களாக இப்படத்தில் நடித்து வந்த அவருக்கான படப்பிடிப்பு ஜூலை 19 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
கேப்டன் மில்லர் ரிலீஸ் எப்போது?
இந்நிலையில் தற்போது ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி திரைப்படமானது 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று படத்தை தயாரித்திருக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சற்று முன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
Our #CAPTAINMILLER is all set for a grand Release this PONGAL / SANKRANTI 2024#CaptainMillerFromPongal#CaptainMillerFromSankranti @dhanushkraja @ArunMatheswaran @NimmaShivanna @sundeepkishan @gvprakash @priyankaamohan @SathyaJyothi pic.twitter.com/xE43r89EEQ
— Sathya Jyothi Films (@SathyaJyothi) November 8, 2023
2 பாகமாக தயாராகும் கேப்டன் மில்லர்:
இதற்கிடையில் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருவதாக கூறப்படுகிறது. கேப்டன் மில்லர் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2021ஆம் ஆண்டு வெளியானது. அதிலிருந்தே, இப்படம் குறித்த ஹைப், ரசிகர்களிடையே பெரிதாக உருவாகியுள்ளது. இலங்கை தமிழர்களுக்காக போராடி உயிர் நீத்த ‘கேப்டன் மில்லர்’ என்பவரின் வாழ்க்கையை வைத்துதான் இப்படம் உருவானதாக பேசப்பட்டது. ஆனால், படத்தின் இயக்குநர் அருண் மாத்தேஸ்வரன் இந்த வதந்திகளை மறுத்து விட்டார். இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லராக மட்டுமே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இப்படம் இரு பாகங்களாக வெளியாவதாக சமீபத்தில் சினிமா வட்டாரங்களில் இருந்து தகவலகள் வெளியானது. இதில், முதல் பாகத்தில் தனுஷ் உடன் இணைந்து சிவராஜ் குமார் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாம் பாகத்தில் அதிதி பாலன் முக்கிய கதாப்பாத்திரத்தில் வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இந்த தகவல் குறித்த் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | தமயந்தி தான் ஓனர் என்ற உண்மை தெரிய வந்தது! குடும்பமா? மெஸ்ஸா? நளதமயந்தி சீரியல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours