மும்பை: அஜித்குமார் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் சல்மான் கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘வீரம்’ படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடித்திருந்தார். ‘கிசி கா பாய், கிசி கி ஜான்’ (Kisi Ka Bhai, Kisi Ki Jaan) என பெயரிடப்பட்ட இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து, நடிகர் சல்மான் கான் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ இந்தி ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தியிலும் இப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனனே இயக்க இருப்பதாகவும், அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. கடைசியாக ‘தபாங்’ (Dabangg) படத்தில் சல்மான் கான் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் மீண்டுமொரு போலீஸ் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருப்பதாகத் தெரிகிறது.
என்னை அறிந்தால்: 2015-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய், அனிகா சுரேந்திரன், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹாரீஸ் ஜெயராஜ் படத்துக்கு இசையமைத்திருந்தார். ரூ.50 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.100 கோடியை வசூலித்தது வணிக ரீதியாகவும் ஹிட்டடித்து.
+ There are no comments
Add yours