பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடைசி வரை இருப்பார், டைட்டில் வின்னர் இவர்தான் எனப் பலரையும் நினைக்க வைத்தவர் பிரதீப் ஆண்டனி.
பெண்களிடம் ஆட்சேபிக்கும் வகையில் பேசினார் உள்ளிட்ட காரணங்களைச் சொல்லி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிவிட்ட சம்பவம்தான் சோஷியல் மீடியாக்களில் பேசுபொருளாக இருந்து வருகிறது. முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள், மக்கள் என பலரும் பிரதீபிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸில் பிரதீப் தொடர்பான வீடியோக்களை அதிக அளவில் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் பிரதீப் தனது x – சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அப்பதிவில் நிறைய யூ -டியூபர்ஸ்களுக்கும், கன்டென்ட் கிரியேட்டர்ஸ்களுக்கும் வெறுப்பான கன்டென்ட் உருவாக்குவது தான் வேலை. அவர்கள் வாழ்ந்துவிட்டுப் போகட்டும்.
நானே எனக்கான கன்டென்ட்டை உருவாக்கி கொள்கிறேன். எதிலும் சிக்கி கொள்ள விரும்பவில்லை. என்னுடைய ஆதரவாளர்கள் இதை ஃப்ரியா விடுங்க” என்று பதிவிட்டிருக்கிறார். இதற்கு முன்னதாக கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்த பிரதீப்பின் பதிவும் சமூக வலைதளங்களில் வைரலானது.
+ There are no comments
Add yours