Leo: "மைக்கேல் ஜாக்சன், ப்ருஸ் லீயைப் பார்த்ததில்லை. ஆனா விஜய்யைப் பார்த்திருக்கேன்!" – மிஷ்கின்

Estimated read time 1 min read

`லியோ’ படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில் விஜய், த்ரிஷா, மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மரியம் ஜார்ஜ், ‘பிக் பாஸ்’ ஜனனி, மேத்யூ தாமஸ், மடோனா செபாஸ்டியன் மற்றும் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், கலை இயக்குநர் சதீஷ் குமார், நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

இயக்குநர் மிஷ்கின், ‘லியோ’ படத்தில் ஒரு லோக்கல் கேங்ஸ்டராக நடித்து, விஜய்யுடன் ஒரு சண்டைக் காட்சியிலும் நடித்து தனது கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்துள்ளார். இந்நிலையில் இன்று நடைபெறும் ‘லியோ’ படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட மிஷ்கின், விஜய் குறித்துப் புகழ்ந்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

Leo Success Meet

விழா மேடையில் பேசிய மிஷ்கின், “என்ன ஒரு அழகான மேடை இது. ஒரு மாசத்துக்கு முன்னாடி ஏர்போர்ட் பக்கத்துல அவசரமாகச் சிறுநீர் கழிக்கப் போனேன். அங்க ஒருத்தன் என்னை பார்த்துட்டே இருந்தான். என்னன்னு கேட்டால், ‘லியோ அப்டேட் இருக்கா’னு கேட்டான். ஸ்வீடன் போனப்பவும் எங்கிட்ட, ‘விஜய் சார் என்ன சொன்னார்’ன்னு கேட்டாங்க! நான் கேள்விப்பட்ட லெஜெண்ட்கள் மைக்கேல் ஜாக்சன், ப்ருஸ் லீ… நான் கண்ணால பார்த்த லெஜெண்ட் விஜய்!

என்னோட கரியர் ‘யூத்’ படத்துலதான் தொடங்குச்சு! இந்த விழாவுக்கு என்னை 4 மணிக்கு வரச் சொன்னாங்க, நான் 4.30க்கு வந்தேன். விஜய் 2.30க்கு எல்லாம் வந்துட்டாரு. இந்தியாவுல ஷூட்டிங் ஸ்பாட்ல 8 மணிக்குலாம் மேக் அப் ஓடத் தயாராக இருக்குற ஒரே ஆர்ட்டிஸ்ட் விஜய்தான். லோகு என்னை நடிக்க கூப்பிட்டாரு, அப்போ சண்டைக் காட்சி. அப்போ விஜய் வந்து என்னைக் கட்டி அணைச்சாரு.

இதையெல்லாம் நான் அடுத்து விஜய்கூட படம் பண்ணணும்ன்னு பேசல. எல்லாமே உண்மை! நிஜ வாழ்க்கைல சில பேர்தான் ஹீரோ, ஆனா விஜய் சினிமாவிலும் நிஜத்திலும் ஹீரோ! இந்த மனிதன் 200 ஆண்டு காலம் வாழ வேண்டும் என வாழ்த்துவேன். இந்தப் படத்துல நடிச்சதைப் பெருமையா நினைக்கிறேன். 25 வருஷமாக ஒரு மனுஷனைப் பின் தொடர வைக்கிற அளவுக்கு என்ன காந்த ஈர்ப்பு வச்சிருக்கார்ன்னு தெரில.

Leo Success Meet

‘யூத்’ படத்துல நான் வேலைப் பார்த்தேன். அதுல வாலி சார் பாட்டு எழுதுனாரு. இறந்துட்டாரு நல்லா இருக்கணும்… அப்போ மணிசர்மா என்னை சங்கர் மகாதேவனுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கச் சொன்னாங்க. அப்போ உள்ளே போகும் போதுதான் நான் முதல் முறையாக இயக்குநரானேன். வாலி சார் பாட்டை எடுத்து உள்ள வச்சுட்டு, கபிலன் எழுதின பாட்டை வச்சேன். அந்த பாட்டு சூப்பர் ஹிட்!” என்றவரிடம் தொகுப்பாளர் சில கேள்விகளைக் கேட்டார்.

தொகுப்பாளர்: “விஜய் சார் எந்த மாதிரி படத்துல நடிக்கணும்ன்னு நீங்க நினைக்கிறீங்க?”

மிஷ்கின்: “ஜேம்ஸ் பாண்ட்!”

தொகுப்பாளர்: “இப்ப விஜய் சார் உங்களுக்கு யாரு?”

மிஷ்கின்: “என் நெஞ்சை அறுத்து அவருக்குக் கொடுத்துருவேன்.”

என்று நெகிழ்ச்சியுடன் பதிலளித்தார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours