பிக் பாஸிலிருந்து ரெட் கார்டு கொடுத்து பிரதீப் வெளியேற்றப்பட்ட விவகாரத்தில், அவருக்கு ஆதரவு பெருகி வருவதால், சூழலை எப்படிக் கையாள்வது என விஜய் டிவியே யோசித்து வரும் வேளையில், அந்த வெளியேற்றத்தின் போது கமல் பேசிய சில வார்த்தைகளும் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றன.
கடந்த 4ம் தேதி அதாவது சனிக்கிழமை எபிசோடில் பிரதீப் வெளியேறிய போது, போட்டியாளர்களிடம் பேசிய கமல், “முந்தைய சீசன்களில் சிலர் வென்றார்கள் என்பதற்காக, அதே போன்ற விளையாட்டை இப்போது விளையாடினால் இப்போதும் மக்கள் ஆதரிப்பார்கள் என நினைக்கக் கூடாது” என்றதுடன், “அன்று ஏன் ஓட்டு போட்டார்கள் என அவர்களுக்கே தெரியாது என நினைக்கிறேன்” என ஆடியன்ஸ் பக்கம் பார்த்துப் பேசியதாகவும் தெரிகிறது.

“பிக் பாஸ் சீசன் 6ல் அசிம் டைட்டில் வென்றதைத்தான் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார் கமல்” என சமூக வலைதளங்களில் அசிம் ஆதரவாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்த, அசிமிடமே பேசினோம்.
“கமல் சார் என் பெயரைக் குறிப்பிட்டுப் பேசலை. இருந்தாலும் இதுவரை நடந்த பிக் பாஸ் சீசன்களிலேயே நிகழ்ச்சி முடிஞ்ச பிறகும் அதுபத்தின விவாதம் போய்க் கொண்டிருந்த சீசன்னா அது நான் கலந்து கொண்ட சீசன் 6 தான். அதுல கலந்து கொண்டு ரன்னரா வந்த விக்ரமன் ஆதரவாளர்கள்தான் நான் டைட்டில் வாங்கியதை ஏத்துக்காம கொஞ்ச நாள் சோஷியல் மீடியாவுல என்னென்னவோ எழுதிட்டிருந்தாங்க.

அது எதையும் நான் கண்டுக்கலை. ஏன்னா, எனக்கு பிக் பாஸ் டைட்டிலை விஜய் டிவியோ அல்லது கமல் சாரோ தன்னிச்சையா முடிவெடுத்துத் தந்துடலை. நிகழ்ச்சியை நூறு நாள்களைத் தாண்டியும் உட்கார்ந்து பார்த்துட்டு வந்த மக்கள் ஓட்டுப் போட்டுத்தான் அந்த டைட்டில் கிடைச்சது. கமல் சார் கையாலதான அந்தக் கோப்பையையே நான் வாங்கினேன்? நான் டைட்டில் வாங்கியதை இன்னுமா கமல் சாரால் ஏத்துக்க முடியலை?
எனக்கு டைட்டில் கிடைச்சதை கமல் சார் ஏத்துக்கலைன்னா பிக் பாஸ் ரசிகர்கள் போட்ட அந்த ஓட்டை அவர் உதாசீனப் படுத்தறார்னுதான் அர்த்தம். எந்த அர்த்தத்துல இதைச் சொன்னார்ங்கிறது கமல் சாருக்குத்தான் தெரியும். ஆனா அவரது பேச்சு எனக்குக் கொஞ்சம் வருத்தத்தைத் தந்ததுனுதான் சொல்வேன்.
கடந்த சீசன் முடிஞ்சு ஒரு வருஷம் ஆகியும் இன்னும் அப்போ டைட்டில் வாங்கினது குறித்து சர்ச்சை தொடர்வதால சொல்றேன். கடந்த சீசன்ல என்னுடன் டைட்டிலுக்கு மோதின விக்ரமன் பிக் பாஸுக்குள் இருந்தப்ப அடிக்கடி பேசிய வார்த்தை ‘அறம் வெல்லும்’.
ஆனா இன்னைக்கு… விக்ரமன் பத்தி எல்லா செய்தித் தாள்கள்லயும் செய்தி வருதே? பெண் வழக்கறிஞர் ஒருவர் அவர் மீது பாலியல் புகார் கொடுத்து அதன்மீது 13 பிரிவுகளில் வழக்கு பதிவாகியிருக்கே?

ஒருவேளை அன்னைக்கு எனக்குப் பதிலா விக்ரமனுக்கு டைட்டில் கிடைச்சிருந்தா, இன்னைக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியைக் கழுவி ஊத்தமாட்டாங்களா மக்கள்?
என்னைப் பொறுத்தவரைக்கும் ஸ்ட்ராட்டஜினு எதையும் பிளான் பண்ணியெல்லாம் அந்த வீட்டுக்குள் செயல்படலை. நான் நானாதான் இருந்தேன். அதற்கான அங்கீகாரமாகத்தான் எனக்கு டைட்டில் கிடைச்சதுனு இப்பவும் நம்பறேன்” என்கிறார் அசிம்.
+ There are no comments
Add yours