How Much Is Thalapathy 68 Director Venkat Prabhu Net Worth ans Salary Details | தலையை சுற்ற வைக்கும் தளபதி 68 பட இயக்குனர் வெங்கட் பிரபுவின் சொத்து மதிப்பு

Estimated read time 1 min read

இயக்குனர் வெங்கட் பிரபுவின் சொத்து மதிப்பு விவரம்: வெங்கட் பிரபுவின் முழு சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. எனவே இயக்குனர் வெங்கட் பிரபுவின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

இயக்குனர் வெங்கட் பிரபு:
வெங்கட் குமார் கங்கை அமரன் வெங்கட் பிரபு (Venkat Prabhu) என்ற பெயர் மூலம் அறியப்படுகிறார். இவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர், திரைப்பட இயக்குநர், பின்னணிப் பாடகர் , திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன். தனது கல்வியை முடித்த பின்னர், அவர் ஒரு நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார், அவரது முதல் மூன்று முயற்சிகள் அவரை ஒரு நட்சத்திர வேடத்தில் நடிக்க வைத்தது, திரைப்படங்களை வெளியிடத் தவறிவிட்டன, அதைத் தொடர்ந்து அவர் கதாபாத்திர வேடங்களில் தோன்றத் தொடங்கினார் . கோடைக்கால வெற்றியான சென்னை 600028 (2007) உடன் இயக்குனராக மாறியபோது முதல்முறையாக அவர் கவனத்தை ஈர்த்தார். அவர் தனது அடுத்தடுத்த இயக்கிய திரைப்படங்களான சரோஜா (2008) மூலம் மேலும் வணிக வெற்றிகளைப் பெற்றார். இதைத் தொடர்ந்து கோவா (2010), மங்காத்தா (2011), பிரியாணி (2013) மற்றும் மாஸ் மசிலாமணி (2015) போன்ற படங்களை இயக்கினார். அதுமட்டுமின்றி படத்தை எந்தவித அலட்டலும் இல்லாமல் படு ஜாலியாக கொண்டுபோவதில் வல்லவர் ஆவார் இயக்குனர் வெங்கட் பிரபு. தற்போது அவரது இயக்கத்தில் கடைசியாக கஸ்டடி படம் ரிலீஸானது. 

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யாவிற்கு பதில் ‘இவர்’ நடிக்க இருந்தார்! யார் தெரியுமா?

இயக்குனர் வெங்கட் பிரபு – தளபதி 68 அப்டேட்:
தற்போது தளபதி விஜய்யின் (Thalapathy 68 Update) அடுத்த படத்தை இயக்குவதற்கு வெங்கட் பிரபு கமிட்டாகியிருக்கிறார். இந்த படத்தின் பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டு முதலில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அடுத்த ஷெட்யூலுக்காக தற்போது பாங்காக் சென்றிருக்கிறது படக்குழு. தற்போது படத்தின் ஆக்ஷன் காட்சிகள் சென்னையிலேயே எடுக்கப்பட்டு வருகிறது. படத்தின் அதிகப்பட்ச காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் வெங்கட் பிரபு சொத்து மதிப்பு: 
இந்த நிலையில் வெங்கட் பிரபு இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதன்படி இவருக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு முழு சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவருக்கு மொத்தம் 10 முதல் 30 கோடி ரூபாய்வரை சொத்துக்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. இவரது தந்தையும், தம்பியும் சினிமாவில் சம்பாதிப்பதால் அவர்கள் சொத்தையும் சேர்த்தால் இதைவிட அதிகம் போகும் என்றும் திரைத்துறையினரால் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | கமலுக்கு உள்குத்துடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரதீப்! என்ன சொன்னார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours