நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள ‘இந்தியன்2’ படத்தின் அறிமுக கிளிம்ப்ஸ் சமீபத்தில் வெளியானது. கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு கமல் நடிக்கும் படங்களின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. கமல்ஹாசன் நவம்பர் 7ம் தேதி தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தியன் 2, வினோத் – கமல் படம், மணிரத்னம் – கமல் படம் என 3 படங்களின் அப்டேட்களும் வெளியாகி வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படம் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 1996ல் வெளியான பிளாக்பஸ்டர் ‘இந்தியன்’ படத்தின் தொடர்ச்சிதான் இந்தியன் 2. இந்தியன் முதல் பாகத்திற்காக கமலுக்கு தேசிய விருது கிடைத்தது.
மேலும் படிக்க | அனிருத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்! ஏன் தெரியுமா?
தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் ‘இந்தியன் 2’ படத்தின் அறிமுக வீடியோ வெளியானது. ஒவ்வொரு மொழியிலும் உள்ள பிரபலங்கள் இந்த வீடியோவை வெளியிட்டனர். ரஜினிகாந்த், மோகன் லால், அமீர்கான், கிச்சா சுதீப் மற்றும் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆகியோர் வெளியிட்டனர். சமீபத்திய அப்டேட்டின் படி, இந்தியன் 3 படமும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. பாடத்திற்கான செலவு ஏற்கனவே அதிகமாகி உள்ளதால், 2 இரண்டு பாகங்களாக வெளியிட்டால் மட்டுமே லாபம் பார்க்க முடியும் என்று படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால் இந்தியன் 3 படத்திற்காக கூடுதலாக சில காட்சிகளை படமாக்க உள்ளனர். சமீபத்திய தகவல்களின்படி, இந்தியன் 2 ஏப்ரல் 12, 2024 அன்று வெளியாகும் என்றும், அதே நேரத்தில் இந்தியன் 3 தீபாவளி 2024 அன்று பிரமாண்டமாக வெளியிட தயாராகி வருகிறது.
Vanakkam Ind
Presenting INDIAN-myX0mfMd8#Indian2anayagan @ikamalhaasan @shankarshanmugh @anirudhofficial @dop_ravivarman @sreekar_prasad @muthurajthangvl @jeyamohanwriter @KabilanVai @Lakshmi10246013 @LycaProductions…
— Rajinikanth (@rajinikanth) November 3, 2023
‘இந்தியன் 2’ அறிமுக வீடியோவில் மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு மற்றும் மாரிமுத்து ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இதில் சிலர் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே இறந்ததால் டூப் வைத்து மீதமுள்ள காட்சிகளை படமாக்கி உள்ளனர். இந்தியன் முதல் பாகத்தில் நடித்த நெடுமுடி வேணு, இரண்டாவது படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்தார். அனால், எதிர்பாராத விதமாக அக்டோபர் 2021ல் காலமானார். கமலுடன் முதன்முறையாக இந்தியன் 2 படத்தில் நடித்த விவேக் ஏப்ரல் 2021 அன்று காலமானார். நடிகர், இயக்குனர், கமலின் நெருங்கிய நண்பர் மனோபாலா சமீபத்தில் மறைந்தார். மேலும் நடிகர் மாரிமுத்து நெஞ்சு வலி காரணமாக சமீபத்தில் இறந்தார்.
லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்க, ரவிவர்மா ஒளிப்பதிவு, ஏ. ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு மற்றும் டி.முத்துராஜ் தயாரிப்பு வடிவமைப்பு மேற்கொள்கின்றனர். படத்தில் கமல்ஹாசன் தவிர சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், டெல்லி கணேஷ், ஜெகன், காளிதாஸ் ஜெயராம், குல்ஷன் குரோவர், ஜாகீர் ஹுசைன், பியூஷ் மிஸ்ரா, அகிலேந்திர மிஸ்ரா மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க | பிக்பாஸ் பிரதீப் குறித்து போஸ்ட் போட்ட கவின்! என்ன சொன்னார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours