நடிகர் கமல் ஹாசனின் சொத்து மதிப்பு விவரம்: சினிமாவில் முதலீடு செய்து படங்கள் தயாரிப்பதை வழக்கமாக வைத்திருக்கும், கமல் ஹாசனின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் கமல் ஹாசன்:
இந்திய சினிமாவில் மிக முக்கியமான ஒருவர் கமல் ஹாசன். நடை பழகிய வயதிலேயே சினிமாவில் தோன்றிய அவர் உதவி நடன அமைப்பாளராக, உதவி இயக்குநராக என பல வழிகளில் பயணித்தவர். ஆனால் அவரது திறமையை உணர்ந்துகொண்ட கே.பாலசந்தர் கமல் ஹாசனை நடிப்பு வழியில் செல்ல அறிவுறுத்தினார். அதன்படி சென்ற கமல் ஹாசனை விஞ்சுவதற்கு நடிப்பில் ஆளில்லை. கலைத்தாயின் பெரிய மகன் சிவாஜி கணேசன் என்றால் இளைய மகன் கமல் ஹாசன் என பலர் கூறுவதுண்டு.
மேலும் படிக்க | ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் Intro-வை வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த்
நடிப்பு மட்டுமின்றி இயக்கத்திலும் கமல் தனி முத்திரையை பதித்தவர். எந்த ஒரு விஷயத்தையும் வித்தியாசமாக சிந்திப்பது மட்டுமின்றி அதை சரியாக ரசிகர்களுக்கு பரிமாறுவது என கமல் மிகப்பெரும் கலைஞன். கமலின் ஒவ்வொரு நரம்பிலும், ஒவ்வொரு துளி ரத்தத்திலும் கலை ஓடுகிறது. அதனால்தான் இன்றளவும் கமல் மீது பலருக்கு வெறுப்பு இருந்தாலும் அவரை ரகசியமாக ரசிக்கவும் செய்கிறார்கள் அவர்கள். அந்தவகையில் கமல் எப்போதும் ஒரு அதிசயமே. சினிமா மட்டுமின்றி கவிதை எழுதுவது, பாடுவது, பாடல் எழுதுவது என கமல் இறங்காத கிரவுண்ட் இல்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் பன்முகத்திறமை என்ற சொல்லுக்கு முழு அர்த்தம் கமல் ஹாசன்.
மக்கள் நீதி மையம்.. பிக்பாஸ்:
கடந்த 2018ம் ஆண்டு மக்கள் நீதி மையம் என்னும் அரசியல் கட்சியை தனது தலைமைகள் தொடங்கினார். கடந்த சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டியிட்டது. முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக ஒப்பந்தமானார். இவர் இதுவரை ஆறு சீசன்களில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். மேலும் தற்போது ஏழாவது சீசனையும் தொகுத்து வருகிறார். இதற்காக பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார் என்று கூறப்படுகிறது. இவ்வாறு அறுபது ஆண்டு சினிமா வாழ்க்கை மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெற்று வரும் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
கமல்ஹாசனின் சொத்து மதிப்பு:
கடந்த 2021 ஆம் ஆண்டு கமல் ஹாசனின் சொத்து மதிப்பை எடுத்துக் கொண்டால் 50 மில்லியன் இருந்தது. ஆனால் 2023 ஆம் ஆண்டு கமலின் சொத்து மதிப்பு அப்படியே டபுள் மடங்காக மாறி இருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 100 மில்லியன் சொத்து மதிப்பு இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதால் அதன் மூலமும் பெரும் தொகை சம்பளமாக கொடுக்கப்படுகிறது. இவ்வாறு பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருக்கும் கமல் தற்போது ஒரு படத்தில் நடிக்க மட்டும் சுமார் ரூ. 130 கோடி மேல் சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இவர் ராஜ்கமல் என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். மேலும் இவரிடம் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருக்கும் கமல் உயர் ரக வாகனங்களையும் நிறைய வைத்திருக்கிறாராம். அந்த வகையில் BMW 730LD மற்றும் Lexus Lx 570 ஆகிய கார்களும் கமல் வசம் இருக்கிறது.
கமலின் Thug Life:
இதனிடையே தற்போது நடிகர் கமல் ஹாசன் 234வது படமான இதற்கு, Thug Life என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தக் லைஃப் படத்தில், கமலுடன் 3வது முறையாக கைக்காேர்த்து நடிக்கிறார், த்ரிஷா. அதேபோல் மலையாள நடிகர் துல்கர் சல்மான், கமல்ஹாசனுடன் அவரது Thug Life படத்தில் இணைந்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவிவும் நடக்க உள்ளதாக இன்று வெளியான அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கமல்ஹாசன் – H. வினோத் இணையும் KH 233 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours