Bruce Willis: மனைவியையே மறந்த ஹாலிவுட் நடிகர் புரூஸ் வில்லிஸ் – தீவிரமடையும் Aphasia பாதிப்பு!

Estimated read time 1 min read

`லாஸ்ட் மேன் ஸ்டாண்டிங்’, `டை ஹார்ட் (Die Hard)’, `தி சிக்ஸ்த் சென்ஸ்’, `ஆர்மகெட்டான்’ (Armageddon) போன்ற பல படங்களில் நடித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் வால்டர் புரூஸ் வில்லிஸ். ஆக்ஷன் ஹீரோவாக உலகளவில் தனக்கென தனி ரசிகர் படையைக் கொண்டவர்.

‘அஃபாசியா (Aphasia)’ என்ற மூளைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நோயினால் பாதிக்கப்பட்ட இவர் திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து ஓய்வுபெறுவதாகக் கடந்த ஏப்ரல் மாதம் கூறியிருந்தார்.

இது குறித்துப் பேசியிருந்த அவரது மனைவி எம்மா ஹெமிங் வில்லிஸ், “இது எங்கள் குடும்பத்திற்கு மிகவும் சவாலான நேரம். உங்கள் (ரசிகர்கள்) தொடர் அன்பு, இரக்கம் மற்றும் ஆதரவை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். உங்களை நாங்கள் எங்கள் குடும்பத்தினர் போல் நடத்த விரும்புகிறோம். உங்களைப் போலவே அவரும் உங்கள் மீது அன்பு கொண்டவர்” என்று கூறினார்.

இந்நிலையில் புரூஸ் வில்லிஸுக்கு, அவரது முன்னாள் மனைவியான டெமி மூரேவையையும், அவரது 5 குழந்தைகளையும் அடையாளம் தெரியவில்லை என்றும் அவருடன் வாழ்ந்த 13 வருட வாழ்க்கை அவரது நினைவில் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமின்றி அவருக்கு ஏற்பட்டுள்ள நோயின் பாதிப்பால், நாளுக்கு நாள் அவர் தன் நினைவுகளை இழந்து அவரது உடல்நிலை மோசமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புரூஸ் வில்லீஸ் குடும்பம்

இந்தப் பாதிப்பினால் முதலில் தன் பேசும் திறனை இழந்தார் புரூஸ். அதைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் அவருக்குப் படிக்கும் திறனும் இல்லாமல் போனது. தீவிர புத்தக வாசிப்பாளரான புரூஸுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது அவரது குடும்பத்தினரைச் சோகத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

புரூஸ் வில்லிஸ் நடிப்பில் உங்களுக்குப் பிடித்த படங்களின் பெயர்களை கமென்ட்டில் சொல்லுங்கள்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours