‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு மிகுந்த பொருட் செலவில் ‘செவன் ஸ்கிரீன்’ நிறுவனத்தின் லலித்குமார் தயாரிக்கும் திரைப்படம் ‘லியோ’தான். லோகேஷ் – விஜய் கூட்டணி என்பதால் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பெரும் வசூல் சாதனை செய்து வருகிறது. இதற்கிடையில் படத்தின் வெளியீட்டின்போதும், படத்தின் கதை குறித்தும், வசூல் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தன.
இந்நிலையில் இன்று நடைபெற்ற லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசிய தயாரிப்பாளர் லலித் குமார், “சிறப்புக் காட்சிக்கு அனுமதி கொடுத்ததுக்குத் தமிழக அரசுக்கு நன்றி.
‘மாஸ்டர்’ படம் ஓடிடில ரிலீஸ் பண்ண பெரிய ஆஃபர் வந்தது. ஆனால், விஜய் சார் ‘என் படம் தியேட்டர்லதான் வரணும்’னு சொன்னாரு. படம் எடுக்குறது ஈசி, ஆனா அதை ரிலீஸ் பண்றது கஷ்டம். பிரச்னை எந்த வடிவுல வரும்னு தெரியாது. எந்தப் பிரச்னை வந்தாலும் நான்கூட இருக்கேன்னு சொன்னார் விஜய் சார். இசை வெளியீட்டு விழா ரத்தானதும் உங்களைவிடவும் நான் 10 மடங்கு வருத்தத்திலிருந்தேன். அன்று இரவே, படத்தின் வெற்றி விழாவை மிகப்பெரியதாக நடத்த முடிவு செய்தேன். ‘படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிறகு நடத்தலாம், நான் வர்றேன்’ என்றார் விஜய்” என்று பேசினார்.
+ There are no comments
Add yours