இன்று சென்னையில் நடைபெற்று வரும் `லியோ’ படத்தின் வெற்றிவிழாவில் கலந்துகொண்ட அர்ஜூன் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் இருவரும் விஜய், ‘லியோ’வில் நடித்தது குறித்தும் விஜய் குறித்தும் பேசியுள்ளனர்.
விழா மேடையில் பேசிய அர்ஜூன், “என்னை பார்க்கும்போது எல்லோரும் ‘ஜெய் ஹிந்த்’னு சொல்வாங்க. ஆனால், ‘லியோ’ படத்துக்கும் பிறகு ‘த்தெரிக்க…’னு சொல்லிரு வாங்கனு ஒரு சின்ன பயம் இருந்தது. த்ரிஷாவிடன் ‘மங்காத்தா’ படத்தில் நடிச்சிருந்தேன். அதுக்கு பிறகு இப்போ ‘லியோ’ படத்துல நடிச்சிருக்கேன். ரெண்டு படத்திலேயும் எனக்கும் த்ரிஷாவுக்கும் காமினேஷன் இல்ல, ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கவேயில்ல.
சிவாஜி சாருக்குப் பிறகு சரியான நேரத்தைக் கடைபிடிப்பதை விஜய் சார்கிட்டதான் பார்த்தேன். 9 மணிக்கும் ஷூட்டிங் என்றால் 7 மணிக்கெல்லாம் அங்க செட்ல இருப்பார். ரொம்ப டெடிக்கேட்டடான சிம்பிளான மனிதர் விஜய்.
அரசியலுக்கு வருவதற்கான எல்லாத் தகுதியும் விஜய் கிட்ட இருக்கும். சீக்கரமே அவர் அரசியலுக்கு வருவார்” என்றார். இதையடுத்து விஜய்யிடம் ‘முதல்வன்’ பட பாணியில், ‘விஜய்யாக இருக்கிறது கஷ்டமா, இஷ்டமா, ஈஸியா?’ என்று கேட்டார்.
அதற்கு விஜய், “வெளியில் இருந்து பார்க்க கஷ்டமா இருக்கும். அது ஈஸிதான். அதுக்குக் காரணம் என்னுடைய ரசிகர்கள்தான்” என்றார்.
கெளதம் வாசுதேவ் மேனன், “‘லியோ’ படத்தின் சம்பளம் எனக்கு பெரும் உதவியாக இருந்தது. வாரிசு திரைப்படத்தில் ஸ்ரீ காந்த் கதாபாத்திற்கு என்னை நடிக்க கூப்பிட்டார்கள். அது நடக்கவில்லை இந்த படத்துல ஜோஷி இன்னும் உயிரோட தான் இருக்காரு. ‘I’m Waiting…'” என்று கூறினார்.
+ There are no comments
Add yours