கூல் சுரேஷ், நடிகை விசித்ரா, சீரியல் நடிகர் விஷ்ணு உள்ளிட்ட பதினெட்டு போட்டியாளர்களுடன் விஜய் டிவியில் கடந்த அக்டோபர் முதல் தேதி தொடங்கியது பிக் பாஸ் தமிழ் சீசன் 7.
நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் எவிக்ஷன் நடப்பது வழக்கம். முதல் வார எவிக்ஷனில் அனன்யா வெளியேறினார். அதற்கடுத்த நாளே எழுத்தாளர் பவா செல்லத்துரை உடல் நிலை சரியில்லை எனச் சொல்லி, தானாகவே வெளியேறினார். தொடர்ந்து அடுத்தடுத்த எவிக்ஷனில் விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா தேவி, ஆகியோரும் வெளியேற நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் மிச்சமிருந்தனர்.

இந்தச் சூழலில் கடந்த வாரம் வைல்டு கார்டு மூலம் தினேஷ், கானா பாலா, பிராவோ, அர்ச்சனா, அன்ன பாரதி என 5 புதிய போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் சென்றனர். மீண்டும் போட்டியாளர்கள் எண்ணிக்கை 18 என ஆன நிலையில் கமல் கலந்து கொள்ளும் இந்த வாரத்துக்கான எவிக்ஷன் எபிசோடின் ஷூட்டிங் இன்று காலை பிக் பாஸ் செட்டில் தொடங்கியது.
நம்பகமான சோர்ஸ் மூலம் தற்போது கிடைத்துள்ள தகவல்படி இந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறவிருப்பது பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி. வைல்டு கார்டு மூலம் கடந்த வாரம்தான் இவர் நிகழ்ச்சிக்குள் சென்றார் என்றாலும் இந்த வாரம் இவர்தான் மிகக் குறைவான ஓட்டுகளைப் பெற்று வெளியேறுவதற்கான பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் என்கிறார்கள்.
’வைல்டு கார்டு போட்டியாளர்கள் ஒரு மாதம் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு வந்திருக்கிறார்கள்; நம் ஸ்ட்ரேட்டஜியைப் புரிந்து வைத்திருப்பார்கள்’ என நினைத்தோ என்னவோ, ஏற்கெனவே பிக் பாஸ் வீட்டிலிருந்த போட்டியாளர்கள் முதல் நாளிலிருந்தே இந்த ஐந்து பேரை ட்ரீட் செய்யும் விதமே வேறு மாதிரியாக இருக்கிறது.

முதல் வாரமே ஐந்து புதிய போட்டியாளர்களையும் திட்டமிட்டே அவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். கோவில்பட்டியைச் சேர்ந்த அன்ன பாரதி மதுரை முத்து குழுவினரின் நகைச்சுவைப் பட்டிமன்றங்களில் பேசி பிரபலமானவர். சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
பிக் பாஸில் நுழைந்த போது கமல்ஹாசனைப் புகழ்ந்து இவர் கவிதை என வாசித்தது மீம் மெட்டீரியல்களாகத் தெறித்த நிலையில் ஒரே வாரத்தில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார்.
+ There are no comments
Add yours