திறமையாக விசாரணையை நிகழ்த்திய கமல்
ஒவ்வொருவரும் சொன்ன புகாரை அப்படியே ஏற்காமல் “நீங்க சொல்றது பெரிய குற்றச்சாட்டு. எனவே தெளிவா, துல்லியமா சொல்லுங்க என்று குறுக்கு விசாரணை செய்யும் திறமையான வழக்கறிஞர் போல இந்த இடியாப்பச் சிக்கலை மிக நிதானமாக கமல் அவிழ்க்க முயன்றது சிறப்பு.
சுரேஷ் குறித்த பஞ்சாயத்து வரும் போது “இங்கு யாருடனும் எனக்கு நட்பில்லை. எல்லோரையும் காலி பண்ணிடுவேன். என்கிற பாணியில் ஆடுகிற நீங்கள் இதில் மட்டும் அம்மா சென்டிமென்ட்டுடன் நடந்து கொண்டது எப்படி?” என்று பிரதீப்பிடம் கேள்வி கேட்டு கமல் மடக்கியது சிறப்பான பாயின்ட்.
‘மணி அடித்ததா, இல்லையா,’ என்கிற விவகாரத்தில் தொடங்கிய இந்தப் பஞ்சாயத்து, பிரதீப்பின் மீதான புகார்களாக குவிந்து ‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என்கிற அதிமுக்கியமான திசையை நோக்கி நகர்ந்ததால் அந்தப் பஞ்சாயத்து அப்படியே அமுங்கி போய்விட்டது. குறும்படத்திற்கான அவசியம் கூட ஏற்படவில்லை.
சக போட்டியாளர்கள் சபையில் சொல்லிக் கொண்டிருந்த புகார்களின் சமீபத்திய உச்ச திருப்பமாக “கழிப்பறையில் தாளிடாமல் சிறுநீர் கழிக்கிறார். கேட்டால் அலட்சியமாக பதில் சொல்கிறார்” என்று மணி சொன்ன குற்றச்சாட்டு பார்வையாளர்களை மிகவும் அதிருப்தி அடைய வைத்திருக்கும். அப்போதும்கூட “நான் வேண்டுமென்று தான் பண்ணேன் என்று பிரதீப் அழிச்சாட்டியமாக சொன்னதை நிச்சயம் எவரும் ரசித்திருக்க மாட்டார்கள். ஆண்களும் பெண்களும் தங்கும் இடத்தில் ‘ஜென்ட்ஸ் யூரினல் மாதிரி பயன்படுத்தினேன். இதில் என்ன தப்பு. முன்னாடியா வந்து பார்க்கப் போறாங்க” என்றெல்லாம் அவர் துடுக்குத்தனமாக பேசியது நிச்சயம் முட்டாள்தனம்.
+ There are no comments
Add yours