BB 7 Tamil Pradeep Antony Given Red Card By Kamal Haasan Fans Reaction

Estimated read time 2 min read

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழ் ரியாலிட்டி ஷோக்களுள் முதன்மையான இடத்தை பெற்றுள்ளது. இந்த போட்டியின் 7வது சீசன் கடந்த மாதம் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில், வலுவான போட்டியாளராக மக்களாலும் பிக்பாஸ் போட்டியாளர்களாலும் பார்க்கப்பட்ட பிரதீப் ஆண்டனி, ரெட் கார்டு காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். 

பிரதீப்பிற்கு ரெட் கார்டு காண்பிக்கப்பட்டது ஏன்? 

பிக்பாஸ் இல்லத்திற்குள் நுழைந்த போதே நடிகர் பிரதீப் ஆண்டனி மீது பலருக்கு எதிர்பார்ப்புகள் பல இருந்தன. இவர், வந்த முதல் வாரத்தில் தனி ஆளாக நின்று பல சவால்களை சந்தித்தார். அவதூறாக சில கருத்துகளை கூறினாலும், அதை யாரிடம் பேசினாரோ அவரிடமே சென்று மன்னிப்பு கேட்டு தன் தவறுகளை சரி செய்து கொண்டார். ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருந்தாலும், தன்னை வெளிக்காட்டி கொள்ள வேண்டும் என்ற காணத்திற்காக இவர் பல விஷயங்களை செய்தார். இது, ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. வார இறுதியில் வரும் கமல்ஹாசனின் எபிசோடில் இவருக்கு பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். 

கடந்த வாரம், பிக்பாஸ் இல்லத்தில் நடத்தப்பட்ட ஒரு டாஸ்கில் கூல் சுரேஷிற்கும் பிரதீப்பிற்கும் வாக்குவாதம் முற்றியது. இதில் பிரதீப், கூல் சுரேஷை தகாத வார்த்தைகளால் பேசினார். இதற்கு பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ் பல தரப்பில் இருந்து எதிர்ப்புகளை தெரிவித்தும் அவர் “கமல் சாரே சொன்னாலும் தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது” என்று கூறினார். இதையடுத்து, சில போட்டியாளர்கள் ஒன்றினைந்து இது குறித்து ‘உரிமை குரல்’ எழுப்பினர். “பெண்களுக்கு பாதுகாப்பில்லை, மரியாதை குறைவாக பேசுகிறார்…” போன்ற குற்றச்சாட்டுகள் பிரதீப் மீது வைக்கப்பட்டன. இதையடுத்து, பிக்பாஸ் போட்டியாளர்களிடம் தனிப்பட்ட முறையில் “ரெட் கார்டு” காண்பிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பெரும்பாலானோர் ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பி விடலாம் என்று கூறினர். இதனால், பிரதீப் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

கொந்தளிக்கும் ரசிகர்கள்:

பிரதீப்பிற்கு ரெட் கார்டு காண்பிக்கப்பட்டதற்கு பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில், பெரும்பாலானோர் அவருக்கு ஆதராவாக பேசி வருகின்றனர். 

Biggboss

கமல்ஹாசனை சாடும் ரசிகர்கள்..

நேற்றைய எபிசோடில் பேசிய கமல், “இந்த முடிவை நான் மட்டும் எடுக்கவில்லை..இந்த ஷோவின் முதலாளிகளுடன் சேர்ந்து கலந்தாலோசிக்க வேண்டியிருந்தது..” என்று கூறினார். “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் இந்த பட்சத்தில் அவர் வெளியேற்றப்படவில்லை என்றால் நானும் வெளியேற்றப்பட்டிருப்பேன்..” என்று கூறினார். 

அவர் கூறிய இந்த கருத்து குறித்து ட்வீட் செய்துள்ள ஒரு ரசிகர், “இது சேனலின் முடிவு அல்ல உங்களின் முடிவு என்பது அனைவருக்கும் தெரியும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சேனல் கருதியிருந்தால் பிரதீப் எப்போதோ வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். வீக் எண்ட் வரை அவர்கள் காத்திருந்திருக்க மாட்டார்கள்..” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ரசிகர் மட்டுமன்றி இன்னும் பலர் பிரதீப் வெளியேறியதற்கு கமல்தான் காரணம் என்று கூறி வருகின்றனர். 

மேலும் படிக்க | பிக்பாஸ் 7: பிரதீப்பை தொடர்ந்து வெளியேறிய மற்றொரு போட்டியாளர்! யார் தெரியுமா?

ஆதரிக்கும் ரசிகர்கள்:

பிக்பாஸில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்தும் சில ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து பதிவு ஒன்றை டிவிட்டர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஒரு ரசிகர், “கமல், பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தது சரியான முடிவுதான்” என கூறியுள்ளார்.

இது குறித்த ஹாஷ் டேக்குகளையும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

“இந்த சீசனில் நடந்த நல்ல விஷயம்..”

பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதற்கு ஆதரவாக இன்னொரு ரசிகரும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த சீசனில் நடந்த ஒரே நல்ல விஷயம் பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்து அவர் எலிமினேட் செய்யப்பட்டதுதான்..” என்று குறிப்பிட்டுள்ளார். 

“மக்கள் சப்போர் இருக்குன்னு ஆடிட்டு இருந்தாரு..” என்று பிரதீப் குறித்து டிவிட்டர் திரெட் ஆகவே இந்த ரசிகர் சில விஷயங்களை இங்கு பதிவிட்டிருக்கிறார். 

“நீங்கள் இதுகுறித்து பேசலாமா?”

கமல்ஹாசன் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பேசுகையில், “பெண்களை பாதுகாப்பின்மையாக உணர வைக்கிறார்..” என்று கூறினார். இது குறித்து ட்வீட் பதிவிட்டுள்ள ஒரு பிக்பாஸ் ரசிகை, சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ரேகா கமல் குறித்து பேசிய செய்தியை பதிவிட்டு “நீங்கள் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசலாமா?” என்று கேட்டிருக்கிறார். 

ரேகா பேசிய அந்த நேர்காணலில், அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடிக்கும் போது “என்ன சத்தம் இந்த நேரம்” பாடலில் தன்னை கேட்காமல் கமல் தனக்கு முத்தம் கொடுத்து விட்டதாக கூறியிருப்பார். இதை மேற்கோள் காட்டி அந்த ரசிகை பதிவிட்டிருக்கிறார். 

முன்னால் பிக்பாஸ் போட்டியாளர்களின் கருத்துகள்..

பிக்பாஸின் முந்தைய சீசன்களில் போட்டியாளர்களாக இருந்தவர்களும் பிரதீப்புக்கு ரெட் கார்டு காண்பிக்கப்பட்டது குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளனர். தொகுப்பாளினி பிரியங்கா, “Not Cool” என்று தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். 

அதே போல நடிகை பாவனி ரெட்டியும் “அனைவருக்கும் ஒரு இரண்டாவது வாய்ப்பு கொடுக்க வேண்டும்..” என்று கூறி பதிவிட்டிருக்கிறார். 

பாவனி

இப்படி பிக்பாஸ் பிரபலங்களே அந்த ஷோவிற்கு எதிராக குரல் கொடுத்திருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ரசிகர்களின் ஒட்டுமொத்த கருத்து என்ன?

பிரதீப் பலரை மரியாதை குறைவாக பேசினார் என்பதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால், பெண்களுக்கு பாதுகாப்பின்மை ஏற்படும் அளவிற்கு பிரதீப் நடந்து கொள்ளவில்லை என்றும் பலர் கூறிவருகின்றனர். இந்த காரணத்திற்காக ரெட் கார்ட் கொடுக்கப்பட்டதை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர்கள் கூறி வருகின்றனர். இதனால், #Unfair #PradeepAntony என்ற ஹேஷ்டேக்குகள் நேற்றில் இருந்து ட்ரெண்டாகி வருகின்றன. பிரதீப்புக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்பதே பலருக்கும் ஒரு மித்த கருத்தாக உள்ளது. 

மேலும் படிக்க | பிக்பாஸ் பிரதீப் குறித்து போஸ்ட் போட்ட கவின்! என்ன சொன்னார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours