ZEE Tamil Kudumba Viruthugal 2023 Double Celebration Awaits On Sunday | ஜீ தமிழ் குடும்ப விருதுகள் ஞாயிற்றுக்கிழமை காத்திருக்கும் கொண்டாட்டம்

Estimated read time 1 min read

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக சேனல் நிர்வாகமும் ஒவ்வொரு ஆண்டு ஜீ தமிழ் குடும்ப விருதுகள் என்ற மிகப்பெரிய விழாவின் மூலமாக பிரபலங்களின் திறமைகளுக்கு மகுடம் சூட்டி வருகிறது. கடந்த வருடத்திற்கான விருது விழா நிகழ்ச்சி இவ்வாண்டு தொடக்கத்தில் நடைபெற்றதை தொடர்ந்து இந்த வருடத்திற்கான விருது விழா நிகழ்ச்சி தீபாவளி ஸ்பெஷலாக ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் கசிந்திருந்தன. 

மேலும் படிக்க | ‘லியோ’ படத்தில் நடிக்க விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு? முழு விவரம்!

இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ஜீ தமிழ் குடும்ப விருதுகள் நிகழ்ச்சி இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் முதல் பாகம் வரும் ஞாயிறு மதியம் 12 மணி முதல் 1 மணி வரை ரெட் கார்பெட் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து மதியம் 1 மணி முதல் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முதல் பாகம் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து இரண்டாம் பாகம் தீபாவளி தினத்தன்று ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, மேலும் தீபாவளி தினத்தின் ஒளிபரப்பு நேரம் குறித்த தகவல் வெகு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. உங்கள் பேவரைட் பிரபலங்களின் திறமைகளை கொண்டாடும் ஜீ குடும்ப விருதுகள் விழாவை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா மற்றும் ஆர்.ஜே விஜய் ஆகியோர் தொகுத்து வழங்க கார்த்திக், விஷால், ஆர்யா, ஜெய், வெற்றிமாறன், கலைப்புலி எஸ் தாணு, பொன் ராம், அருண் விஜய், பார்த்திபன், ஜெயம் ரவி என எக்கச்சக்கமான திருவிழாவுக்கு பிரபலங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். ஜீ தமிழ் பிரபலங்களின் திறமையை கொண்டாடும் இந்த நிகழ்ச்சி நிச்சயம் மக்களின் மனதை கவரும் என எதிர்பார்க்கலாம்.  ஃபேவரைட் விருதுகள் அனைத்தும் மக்களின் ஓட்டுகளின் முலமே தேர்வு செய்யப்பட்டது. ஆமாம், தமிழகம் முழுவதும் வாகனத்தில் பயணம் செய்தும், மிஸ்டுகள் கால், ஆன் லைன் ( Zee 5 ) என பல்வேறு வழிமுறைகளில் பெறப்பட்ட பல லட்சக்கணக்கான ஓட்டுக்களின் மூலமாகவே வெற்றியாளரை தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஹீரோவுக்கு வசனமே இல்லை-ஆனால் படம் சூப்பர் ஹிட்! அது என்ன படம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours