Ttf Vasan Bike Accident Helmet Footage Video Leaked | பைக் விபத்தின் போது TTF வாசன் ஹெல்மெட்டில் பதிவான வீடியோ வெளியானது

Estimated read time 1 min read

TTF Vasan Bike Accident: சாலை விபத்தில் கைது செய்யப்பட்ட TTF வாசன் பைக்கில் இருந்து கீழே விழுந்த போது ஹெல்மெட்டில் பதிவான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.  சென்னை – வேலூர் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கி விபத்துக்குள்ளானதாக பாலுச்செட்டி சத்திரம் போலீசார் பதிந்த வழக்கில்,  யூடியூபர் டி.டி.எப்.வாசன் கடந்த செப்டம்பர் 19ம் தேதி கைது செய்யப்பட்டார்.  புழல் சிறையில் அடைக்கப்பட்ட டி.டி.எப்.வாசன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  விளம்பரத்துக்காகவும், மற்ற இளைஞர்களை தூண்டும் வகையிலும் செயல்பட்டுள்ள மனுதாரரின் செயல், ஒரு பாடமாக அமைய வேண்டும், அவர் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும் எனக் கூறி, ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து,  youtube தளத்தை மூடிவிட்டு பைக்கை எரித்து விடுலாம் என கருந்து தெரிவித்து இருந்தார்.

மேலும் படிக்க | சின்னத்திரையில் எண்டிரி கொடுக்கிறார் நடிகை மாளவிகா..!

இந்தநிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாசனின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவரால் வாகனம் ஓட்ட முடியாது என கூறினார். மேலும், 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.  காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வாசனுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனையடுத்து, மூன்று வாரங்களுக்கு தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 

https://www.youtube.com/watch?v=YbfYNqLN8Cw

அவரது நண்பர்கள், குடும்பத்தினர் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த டிடிஎஃப் வாசனை அழைத்து சென்றனர். சிறை வாயிலில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிஎஃப் வாசன், சர்வதேச ஓட்டுனர் உரிமம் பெறலாம் என்றும், மேல்முறையீட்டுக்கும் செல்லலாம் என்பதால் மீண்டும் கட்டாயம் பைக் ஓட்டுவேன். கை முடிந்ததை விட ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டபோது கண்கலங்கினேன் என்று புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த டி.டி.எப்.வாசன் பேட்டி அளித்துள்ளார்.  ” மிகப்பெரிய விபத்தில் சிக்கிய தனது முதுகில் சிறிய அளவில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்றும், அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்றும், 10 ஆண்டுகள் எப்படி ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யலாம் எனவும், 6 மாதங்கள், 1 ஆண்டு மட்டுமே ரத்து செய்யப்பட்டதாகவும், நானாக எனது கையை உடைத்து கொண்டதாக வழக்கு பதிவு செய்துள்ளதாக ஆதங்கம் தெரிவித்தார். சிறை அனுபவம் கடினம் தான் எனவும், சிறையில் அதிகாரிகள் பண்பாக நடந்து கொண்டதாக தெரிவித்தார். 

10 ஆண்டுகள் ஓட்டுநர் உரிமம் செய்யப்பட்டுள்ளது என்பது திருத்துவதாக இல்லை எனவும், வாழ்க்கையை அழிப்பதாக உள்ளதாக தெரிவித்தார். தன் மீது கொடுத்த புகாரே தவறாக உள்ளதாக கூறினார். வாகனத்தை ஓட்டுவது தான் தன்னுடைய விருப்பம் எனவும் தன்னுடைய விருப்பத்தையே தொழிலாக மாற்றி உள்ளதாகவும் வாசன் தெரிவித்தார். உங்களை பார்த்து சிறுவர்கள் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது குறித்த கேள்விக்கு நீங்கள் ஏன் சிறுவர்களுக்கு பைக் கொடுக்குறீர்கள் என டிடிஎஃப் வாசன் பெற்றோர்களுக்கு வினா எழுப்பினார். என்னை பார்த்து சிறுவர்கள் ஈர்க்கப்பட்டு அதிவேகமாக வாகனம் ஓட்டுவதாக கூறும் நிலையில் எதை பார்த்து தான் அனைவரும் ஈர்க்கவில்லை எனவும் தான் கூட சிறுவனாக இருந்தபோது எல்லா ரிப்போர்ட் என்னுடைய பெற்றோரிடம் ஹெலிகாப்டர் கேட்டேன் என வாசன் தெரிவித்தார். குழந்தைகள் கேட்டவுடன் வாகனம் வாங்கி தருவது எந்த வகையில் நியாயம் எனவும் வாசன் எதிர் கேள்வி எழுப்பினார். 

தன்னுடைய கை எலும்பில் நிச்சயமாக முறிவு ஏற்பட்டது என்றும் டிடிஎஃப் வாசன் தெரிவித்தார். ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் திரைப்படத்தில் நடிப்பீர்களா என கேள்விக்கு திரைப்படத்திலும் நடிப்பேன் கட்டாயம் பைக்கும் ஓட்டுவேன் என வாசன் உறுதிப்பட தெரிவித்தார், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு சர்வதேச ஓட்டுனர் உரிமம் பெறலாம் தற்போதைய ஓட்டுனர் உரிமம் ரத்த தொடர்பாக மேல்முறையீடும் செய்யலாம் எனவும் தெரிவித்தார். தன்னுடைய கை எலும்பு முறிந்த போது கூட கவலைப்படவில்லை எனவும் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது தெரிந்த போது கண் கலங்கியதாக தெரிவித்தார். பத்தாண்டுகள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டபோது மிகவும் கவலை பட்டதாக தெரிவித்தார். நேபால் மட்டுமே சென்றுள்ள நிலையில் தன்னுடைய பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மீண்டும் பாஸ்போர்ட் எடுப்போம், வெளிநாடு செல்வோம் என தெரிவித்தார். 

ஹெல்மெட் உள்ளிட்ட பொருட்கள் தொடர்பாக புதிதாக தொழில் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார். டிடிஎஃப் வாசன் உடல்நலம் தேடி வந்ததற்கு பிறகு மஞ்சள் வீரன் படப்பிடிப்பு தொடங்கப்படும் என திரைப்படத்தின் இயக்குனர் தெரிவித்தார். பெரியார் பிறந்த தினத்தில், அறிஞர் அண்ணா பிறந்த மண்ணில் விழுந்த ஒருவன், இந்த தமிழ் மண்ணில் மாபெரும் தலைவனாக வருவான், வெல்வான், என்றும் இயக்குனர் தெரிவித்தார்” டிடிஎஃப் வாசன்.  சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை வைத்துக்கொண்டு இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் டிடிஎஃப் வாசன் வாகனம் ஓட்ட முடியாது என்று தமிழக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.  

மேலும் படிக்க | மீண்டும் இணைந்த விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா கூட்டணி! தீபாளிக்கு வெளியாகும் ரெய்டு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours