தமிழ்க் குடிமகன் – (தமிழ்) – Amazon Prime Video
எசக்கி கார்வண்ணன் இயக்கிth தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தமிழ்க் குடிமகன்’. சேரன், லால், எஸ்.ஏ. சந்திரசேகர், ஸ்ரீபிரியங்கா, தீப்ஷிகா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் Amazon Prime Video தளத்தில் வெளியாகியுள்ளது.
சேரன் அரசு வேலை பார்க்கவேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். ஆனால், அவரைச் சாவுச்சடங்குகளைச் செய்ய நிர்பந்திக்கிறார்கள். சாதிய ரீதியிலான குலத்தொழிலைச் செய்ய மறுக்கும் சேரனுக்கு, அந்த ஊர்காரர்களால் ஏற்படும் பிரச்னைகள், ஒடுக்குமுறைகள் எனக் கிராமங்களில் நடக்கும் தீண்டாமையையும், சாதிய அரசியலையும் மையமாகக் கொண்டதுதான் இதன் கதைக்களம்.
Month Of Madhu – (தெலுங்கு) Aha
ஸ்ரீகாந்த் நாகோதி இயக்கத்தில் நவீன் சந்திரா, சுவாதி ரெட்டி, ஸ்ரேயா நவிலே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் ‘Month Of Madhu.’ காதலித்துத் திருமணம் செய்து, விவாகரத்து வரை வந்து நிற்கும் இருவரின் உறவுச் சிக்கல்களைப் பற்றிப் பேசும் இப்படம் (Aha) தளத்தில் வெளியாகியுள்ளது.
சுவாதி ரெட்டி, காதலித்துத் திருமணம் செய்து அந்த உறவில் ஏற்படும் பிரச்னைகளால் விவாகரத்து பெற்றுவிடலாம் என்ற முடிவெடுத்துக் குழப்பத்தில் இருக்கிறார். இந்தியக் குடும்பங்களின் காதல், திருமண வாழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் ஒரு மார்டன் NRI பெண், அவர்கள் இருவரிடமும் அவர்களின் காதல் மற்றும் திருமண வாழ்வு குறித்துப் பேசுகிறார். விவாகரத்து பெற விரும்பும் சுவாதி ரெட்டியின் மனநிலை என்ன, அதன் பின்னணி என்ன என்பதே இதன் கதைக்களம்.
+ There are no comments
Add yours