பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ஷாருக் கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பதான், ஜவான் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆகி ஷாருக் கான் நடிக்கும் அடுத்தப்படங்களின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.
இந்த படங்களின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டன்கி’ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
இன்று ஷாருக் கான் தனது 58- வது நாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ‘டன்கி’ திரைப்படத்திற்கான டீசரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ஷாருக் கானின் பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஷாருக்கின் ரசிகர்கள் நேற்றிரவே அவரது வீட்டின் முன் குவிந்து தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது ‘x’ வலைதளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப்பதிவில் , “எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூற இரவே என் வீட்டின்முன் ரசிகர்கள் குவிந்ததை என்னால் நம்ப முடியவில்லை. நான் வெறும் நடிகன் மட்டுமே.
என்னால் முடிந்த அளவு எனது நடிப்பின் மூலம் உங்களை மகிழ்விக்க முடிகிறது என்பதை விட வேறு சந்தோஷம் ஏதுமில்லை. உங்கள் அன்பெனும் கனவில் நான் வாழ்கிறேன் “ என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
+ There are no comments
Add yours