90ஸ் குழந்தைகளின் மனதில் குடிகொண்ட நாயகிகளுள் ஒருவர், ரம்பா (Rambha). தமிழ் திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளாக முன்னணி ஹீரோக்களாக இருக்கும் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். இவர், தனது திருமணத்திற்கு பிறகு திரையுலகை விட்டு விலகினார். தற்போது, பல வருடங்கள் கழித்து சினிமாவிற்குள் இவர் ரீ-எண்ட்ரி (Rambha Re-Entry) கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கனவுக்கன்னி:
1990-2000 காலக்கட்டம் வரை தமிழ் சினிமாவை ஆண்ட நாயகிகளுள் ஒருவர், ரம்பா. இவரது இயற்பெயர் விஜயலக்ஷ்மி. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட 8 இந்திய மொழி படங்களில் ரம்பா நடித்துள்ளார்.15 வயதிலேயே மலையாள படம் ஒன்றின் மூலம் திரைக்கு வந்த இவர், தென்னிந்திய மொழியில் இருந்த முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ரம்பாவிற்கு ஆரம்ப கால சினிமா வாழ்க்கையே அமர்களமாக அமைய, ஹிட் ஹீரோயினாக வலம் வந்தார்.
குறைந்த ஆண்டுகளிலேயே 100 படங்களில் நடித்து விட்ட இவர் தமிழ் ரசிகர்களால் “தொடையழகி” என்று அழைக்கப்பட்டார். ரஜினியுடன் அருணாச்சலம், கமலுடன் காதலா காதலா, விஜய்யுடன் நினைத்தேன் வந்தாய், அஜித்துடன் ராசி என அனைத்து ஸ்டார் நடிகர்களுடன் நடித்து விட்டார்.
மேலும் படிக்க | அர்ஜுனின் மகளுக்கு வருங்கால மாமனார் தம்பி ராமையா போட்ட கண்டீஷன்! என்ன தெரியுமா?
திரையுலகை விட்டு விலகல்:
டாப் ஹீராேயினாக இருந்த ரம்பா, 2010ஆம் ஆண்டு கனடாவை சேர்ந்த இலங்கை தொழிலதிபர் இந்திரகுமார் பத்மனாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ரம்பாவிற்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். தற்போது, ரம்பாவும் அவரது குடும்பத்தினரும் கனடாவில் உள்ள டொராண்டொ என்ற நகரில் வசித்து வருகிறார்.
ரம்பாவை மீண்டும் திரையுலகில் நடிக்க வர கூறி, ரசிகர்கள் பலர் பல ஆண்டுகளாக வேண்டுகோள் வைத்தனர். ஆனால் இது குறித்த ரம்பா வாய் திறக்காமல் இருந்தார். இவர் ஹீரோயினாக இருந்த காலத்தில் நடிகைகளாக இருந்த ரம்பா, சிம்ரன் உள்ளிட்டோர் தற்போது பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அதனால் இவரும் சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுப்பது குறித்து ஏதேனும் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
மீண்டும் எண்ட்ரி:
தன்னுடன் நடித்தவர்கள் தற்போது கோலிவுட்டிற்கள் எண்ட்ரி கொடுத்த கலக்கி கொண்டிருக்கும் நிலையில், ரம்பாவிற்கும் மீண்டும் நடிக்க ஆசை வந்து விட்டதாக கூறப்படுகிறது. கணவருடன் வெளிநாட்டில் செட்டில் ஆகியிருந்த ரம்பா, தற்போது சிலரிடம் படங்களில் நடிக்க கதை கேட்டு வருவதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து பேசியுள்ள ரம்பா, சினிமாவை பொருத்தவரை ஒரு சிலருக்கு மட்டும்தான் கனவுக்கண்ணி என்ற பட்டம் கிடைக்கும் என்றும் அது தனக்கும் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் கூறியுள்ளார். நடிக்கும் போது தான் சுட்டிபெண்ணாக இருந்ததாகவும் திருமணத்திற்கு பிறகும் பலர் தன்னை நடிக்க வர சொல்லி அழைத்ததாகவும் கூறியுள்ளார். தன் குழந்தைகளுக்கு நல்ல அம்மாவாகவும் கணவருக்கு நல்ல மனைவியாக இருப்பதாகவும் ரம்பா பேசியுள்ளார். இன்றளவும் ரசிகர்கள் தன்னை மறக்காமல் நடிக்க அழைப்பதும், அவர்களது அன்பும்தான் தன்னை மீண்டும் நடிக்க தூண்டுவதாக கூறியுள்ளார்.
எந்த படத்தில் நடிக்கிறார்..?
ரம்பா, தான் தொடர்ந்து சினிமாவை கவனித்து கொண்டுதான் இருப்பதாகவும் சினிமாவின் ட்ரெண்ட் தற்போது மாறியுள்ளதாகவும் கூறியுள்ளார். 47 வயதாகும் ரம்பா, தன் வயதுக்கு ஏற்ப வித்தியாசமான கதைகளை இனி தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் இது குறித்து தனது திரை நண்பர்களுடன் கலந்து ஆலோசித்து வருவதாகவும் கூறியுள்ளார். ரம்பாவிற்கு பெரிய பெயரை தேடிக்கொடுத்தது தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள்தான். அதனால், இவர் மீண்டும் நடிக்க வந்தால் அனேகமாக தெலுங்கு அல்லது தமிழ் படம் ஏதாவது ஒரு மொழியில்தான் முதலில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | லியோ படத்தில் நடிக்க கவுதம் மேனன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours