நடிகர் விஜய்யின் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி ‘லியோ’ திரைப்படம் வெளியானது.
இந்நிலையில் நேற்றைய தினம் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கெளதம் மேனன், மிஸ்கின்,நடன இயக்குநர் சாண்டி, தினேஷ், நடிகர் மன்சூர் அலி கான், நடிகை த்ரிஷா ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
இந்த விழாவில் வழக்கம் போல தனது அக்மார்க் பாணியில் ‘காக்கா – கழுகு’ குறித்து ஒரு குட்டிக் கதையைக் கூறி ‘ உயரிய கனவுகள் வேண்டும்’ எனக் முடித்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் ,” ஒரு குட்டிப் பையன் ஆசை ஆசையாக அப்பாவோட சட்டையை எடுத்துப் போட்டுக்குவான். அப்பாவோட வாட்ச் எடுத்துக் கட்டிக்குவான். அப்பாவோட சேர்ல உட்கார்ந்துக்குவான். அப்பாவோட சட்டை அவனுக்கு செட் ஆகாம பெருசா இருக்கும். வாட்ச் கையிலேயே சேராது.

இந்த சேர்ல நாம உட்காரலாமா வேண்டாமா, நமக்கு அந்த தகுதி இருக்கா, இல்லையான்னுலாம் அவனுக்குத் தெரியாது. அப்பாவோட சட்டை அது . அப்பா மாதிரி ஆகனும்ன்னு அவனுக்கு கனவு. அதுல என்ன தவறு இருக்கு. ” எனக் கூறினார். மேலும் லோகேஷ், நெல்சன், அட்லீ குறித்தான கேள்விக்கு பதிலளித்த நடிகர் விஜய் ,” மூணு பேரும் ரொம்ப திறமையானவங்க, அவுங்க தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துட்டுப் போனாங்க. நான் எதுவும் பண்ணல.. All the best my boys” எனக் கூறினார்.
இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் பற்றி நடிகர் விஜய் ,” மாநகரம் திரும்பி பார்க்க வச்சாரு. கைதி திரும்ப திரும்ப பார்க்க வச்சாரு. மாஸ்டர், விக்ரம் படம் மூலமா இந்தியாவை திரும்பி பார்க்க வச்சாரு. லியோ மூலமாக… ஹாலிவுட் தான் பாக்கி இருக்கு. திரும்பி பார்த்திருச்சா?… பார்க்கும்… Keep rocking man. ” எனக் கூறினார்.

மேலும், லோகேஷின் ரிடையர்மென்ட் பற்றிக் கேட்டனர், அதற்கு விஜய்,” அதெல்லாம் இல்ல, அவர் சும்மா சொல்றாரு, போகமாட்டாரு.” என்றார். இதனையடுத்து ” உங்க கட்சில லோகேஷுக்கு என்ன பதவி கொடுக்கிறதாக இருந்தா , எந்த பதவி கொடுப்பீங்க ? ” எனக் கேட்டனர். இதற்கு பதிலளித்த விஜய் ” கற்பனையாக கேட்கிறதுனால, போதை மருந்து தடுப்பு பிரிவுல ஒரு மந்திரி பதவி கொடுக்கலாம்.” என்றார்.
+ There are no comments
Add yours